தித்திப்பான தீபாவளி – Sweets and Savouries | The Culinary Queen திருமதி. மல்லிகா பத்ரிநாத்

பட்டாசும், பலகாரமும் தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள்.

இந்நாட்களில் விதவிதமான பலகாரங்கள் கடைகளில் கிடைத்தாலும், நம் வீட்டின் அடுப்பில் செய்யும் பலகாரங்களுக்கு ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு.

சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான தீபாவளியை கொண்டாட நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த The Culinary Queen திருமதி. மல்லிகா பத்ரிநாத் அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்கு பல இனிப்பு, கார வெரைட்டிகளின் ரெசிபிகளை பகிர்ந்துள்ளார்.

கேழ்வரகு தட்டை

பாதாம் பர்பி

சாமை பேரிச்சம்பழம் பாயாசம்

Wishing everyone a Delicious Diwali 🎉🎇🎊

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

இந்திய சுதந்திர போராட்ட தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள்

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுப்பட்ட திருப்பத்தூர் தியாகி திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையை நாட்டு மக்களுக்கும், நம் வைஸ்ய சமுதாய மக்களுக்கும் அர்ப்பணித்தவர்.

திருப்பத்தூர் நகரில் காங்கிரஸ் கமிட்டியை தோற்றி வைத்து அதன் தலைவராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு, தன் குடும்பத்தை மறந்து தியாகம் பல செய்து சிறை சென்றவர்.

கர்ம வீரர் காமராஜர், கக்கன், ம.போ.சி போன்ற தலைவர்களுடன் இணைந்து ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி சிறையில் ஆறு மாதங்களுக்கு மேல் வாடியவர்.

தன்னுடைய துணைவியார் திருமதி.வரலட்சுமி அம்மாளின் 50 பவுன் ஒட்டியாணத்தை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை சுதந்திர போராட்டத்திற்காக நிதி அளித்த வள்ளல் திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் ஆவார்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின் இந்திரா காந்தி அவர்களின் கைப்பட வரைந்த தாமிரபத்திரத்தை பெற்றார்.

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற தியாகளுக்கு அரசு அளித்த நிலத்தினை வினோபா பாவேயிடம் தாரை வார்த்த மாமனிதர் திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களின் பெயர் இந்திய அரசு வெளியிட்ட “Who is Who” என்ற புத்தகத்தில் இடம்பெற்றளது.

திருப்பத்தூர் மைய நகரில் தான் தொடங்கிய ஜவுளி கடைக்கு நாட்டின் முதல் ஜனாதிபதியான திரு. ராஜேந்திர பிரசாத் அவர்களின் ஞாபகார்த்தமாக ‘பிரசாத் எம்போரியம்’ என பெயர் வைத்தார் இந்த தேச பக்தர்.

ஆர்ய வைசியர் சமாஜம் மற்றும் திருப்பத்தூர் கன்னிகா பரமேஸ்வரி கல்யாண மண்டபம் ஸ்தாபகராக நம் வைஸ்ய சமூக மக்களுக்கும், மாணவர்களுக்கும் பல உதவிகளை செய்தார்.

பலராலும் கொண்டாடப்பட்ட தலைவரான திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களை நாம் அனைவரும் இணைந்து போற்றுவோம்.

Details shared by – திருமதி. உமாமகேஸ்வரி அவர்கள் Mob: 8754677363 | திரு. S. B. கோபாலகிருஷ்ண செட்டியார் அவர்களின் மகன் வழி பெயர்த்தி

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Heroes of Aryavysyas – சுழலும் உலகை மிதிவண்டியில் சுழற்றும் ஆர்ய வைஸ்யர்

வேலூர் நகரம் தேசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர் திரு. பிரமோத் குமார், லண்டனில் நடைபெற்ற மிதிவண்டி போட்டியில் பங்கேற்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 6- வருடங்களாக சைக்கிளிங் (Cycling) பயிற்சி செய்து வருகிறார் திரு.பிரமோத் அவர்கள், அவர் வேலூர்/இராணிப்பேட்டை இணைந்த ரென் சைக்கர்ஸ் (Ran Cycers) கிளப்பில் உறுப்பினராக உள்ளார்.

லண்டன் LEL போட்டி

திரு.பிரமோத் அவர்கள் லண்டன் ஆடோக்ஸ் சைக்கிளிங் கிளப் மூலம் LEL (London – Edinburgh – London) என்ற உலக அளவிலான மிதிவண்டி போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது, அதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற LEL-2022 போட்டிக்கான தூரம் 1540 கி.மீ தூரம் மற்றும் உயர்வு தூரம் (Elevation Gain) 14500 மீட்டர்கள், போட்டிக்கான தூரத்தை 128 மணி நேரம் 40 நிமிடங்கள் கடக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் குறிபிட்ட தூரத்தை கடப்பவர்கள் அனைவருமே போட்டி வெற்றியாளர்கள் மற்றும் சாதனையாளர்கள் தான்.

இந்த ஆண்டு நடைபெற்ற LEL-2002 மற்ற ஆண்டுகளில் நடைபெற்ற LEL போட்டிகளை விட மிகவும் கடினமாகவே இருந்தது.

பிரமோத் குமாரின் சாதனை

உலகம் முழுவதிலும் இருந்து 1600-க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் பங்கேற்றிருந்தாலும் பந்தைய தூரத்தை குறிப்பிட்ட நேரத்தில் கடந்து வெற்றி பெற்றவர்கள் 920 பேர் மட்டுமே.

இதில் 52 இந்தியர்கள் அடங்குவர். போட்டியில் பங்குபெற்ற 40 தமிழ்நாட்டு வீரர்களில் அதிலும் 11 தமிழ்நாட்டு வீரர்கள் மட்டுமே வெற்றி பெற்றனர். அதில் மணிமகுடமாக திகழும் நமது ஆர்ய வைஸ்யரான திரு.பிரமோத்குமார் அவர்கள் போட்டிக்கான தூரத்தை 3 மணி நேரம் முன்பாகவே அதாவது 1540 கி.மீ தூரத்தை 125 மணி நேரத்தில் கடந்து போட்டியில் அசாத்திய வெற்றி பெற்றுள்ளார் என்றால் அது மிகையாகாது.

போட்டிக்கான பதாகையுடன் திரு.பிரமோத்குமார் அவர்கள்.

ஆர்ய வைஸ்யர்கள் உடல் வலிமை குன்றியவர்கள் என்று நம் குல பெரியவர்களே சிலர் பேசி வரும் சூழ்நிலையில் அவற்றை எல்லாம் பொய்யாக்கும் விதமாக ஆர்ய வைஸ்யர்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், 47 வயதான நம் ஆர்ய வைஸ்யர் திரு.பிரமோத் குமார் அவர்கள்.

அவருக்கு நம் ஆர்ய வைஸ்யர்கள் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்து கொள்வோம்.

திரு.பிரமோத்குமார் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க:

Mr. C.S. Pramod Kumar
கோத்திரம்: DESATLA
SREE LAKSHMI JEWELLERY
426, MAIN BAZAAR,Vellore – 4
+91-9344421664

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

விடுதலைப் போராட்ட வீரர் ஜெயராமன் செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா ஒடுக்கத்தூரை சேர்ந்த தியாகி ஜெயராமன் செட்டியார் தன்னுடைய பதினாறாம் வயதில் பாரத நாட்டிற்கான விடுதலைப் போராட்ட களத்தில் பங்குகொண்டார்.

பெருந்தலைவர் காமராஜரின் தொண்டராக விளங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டதனால் ஆங்கில அரசால் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு சுதந்திர இந்தியாவின் வடாற்காடு மாவட்ட கலெக்டர் நிலம் வழங்குவதாக கடிதம் அனுப்பினார். அதை ஏற்க மறுத்த மாமனிதர் ஜெயராமன் செட்டியார் பற்றிய புரட்சி பதிவு. ஜெய் ஹிந்த்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

District Collector N.V. Sugavanam’s letter to Thiru. Jayraman Chettiar

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Heroes of Aryavysyas | ஆர்ய வைஸ்ய தற்காப்பு கலைஞர் – திரு. நாகேந்திரன்

இன்று செப்டம்பர் 14, தற்காப்பு கலையின் தாயும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் அடிப்படை கலையான அடிமுறை தினம் இன்று, அதாவது உலக அடிமுறை தினம், இன்னாளில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் ஒரு ஆர்ய வைஸ்யரை பற்றி அறிந்து கொள்வோம்.

தற்காப்பு கலைகள்

தற்காப்பு கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். இதன் இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றை விடச் சில தற்காப்புக் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு.

சில தற்காப்புக் கலைகளின் வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல தற்காப்புக் கலைகள் தற்காப்பு விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. தற்காப்புக் கலையில் ஈடுபடுபவர் தற்காப்புக் கலைஞர் எனப்படுவர்.

திரு. நாகேந்திரன் எனும் தற்காப்பு கலைஞர்

திரு.நாகேந்திரன் அவர்கள் கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர், சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சின்னிசெட்ல கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் தந்தை திரு.ஜெயராமன் மற்றும் தாயார் திருமதி.ஸ்ரீமதி அவர்களுக்கு இரண்டாவது மகனாக பிறந்தார்.

தன்னுடைய 10 வயதிலேயே கராத்தே எனும் தற்காப்பு கலையை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்.

தொடர்ந்து 26 வருடங்களாக கராத்தே எனும் தற்காப்பு கலையை கற்று தற்போது பிளாக் -2 டான் (Black Belt 2 Dan) பட்டத்தை பெற்றுள்ளார். இது எளிதான காரியம் அல்ல, அதற்காக கராத்தே கலையின் அடிப்படைகளை அறிய வேண்டும்.

கராத்தே படிகள்

முதலில் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை,
நீலம், பர்ப்பிள் 1, பர்ப்பிள் 2, பிரவுன் 1, பிரவுன் 2, அதற்கு பிறகு பிளாக் பெல்ட் (Black Belt), அதன்பிறகே பிளாக் பெல்ட் டான் 1 (Black belt Dan 1), பிளாக் பெல்ட் (Black belt Dan 2). இது போன்று கராத்தே படிகள் அமைந்துள்ளன.

கராத்தே தற்காப்பு கலையில் படிநிலைகளை காட்டும் ஏடு

பிளாக் பெல்ட் 2 டான்

கராத்தே தற்காப்பு கலையில் கருப்பு நிற பெல்ட்டை பெறுவதே கடினம், அதையும் தாண்டி கருப்பு பெல்ட் 1 டான் மற்றும் கருப்பு பெல்ட் 2 டான் பெறுவது மிக கடினம். இத்தகைய கருப்பு பெல்ட் 2 டான் தகுதியை அடைந்த ஆர்ய வைஸ்யர்கள் ஓரிருவர்களில் இவரும் ஒருவர்.

தற்போது தனியார் நிறுவனத்தில் மென்பொருள் ஊழியராக பணிபுரியும் இவர் தாம்பரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்ட ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ஆர்ய வைஸ்ய சமுகத்திற்காக சேவை செய்தும் வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆர்ய வைஸ்ய மகாசபா விரைவில் நடத்த இருக்கின்ற (Future Plan) உடலினை உறுதி செய் திட்டத்திற்கு திட்ட தலைவராக இருந்து ஆர்ய வைஸ்ய சமுகத்தில் சிறந்த கராத்தே குழந்தைகளை உருவாக்க தயாராக உள்ளார்.

உடலின் முக்கியத்துவத்தை அறிந்து அதை போற்றி தற்போது கராத்தே மாஸ்டராக உருவெடுத்துள்ள இந்த ஆர்ய வைஸ்யரை வாழ்த்துவோம்.

உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க – திரு.நாகேந்திரன்
+919962583215

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வருடம் ஒரு வாசவி கோவில்

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்ட நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அவதரித்தார். சக்திவாய்ந்த ஶ்ரீ வாசவி தேவியின் தரிசனத்தை பெறுவதற்காக தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை வைஸ்ய பெருமக்கள் கட்டியுள்ளனர்.

ஶ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் தரிசனம் அனைத்து ஊர்களில் உள்ள வைஸ்ய குல மக்களுக்கும் தினமும் கிடைத்திட வேண்டும் என்னும் நோக்கில் முன்னாள் மாநில மகாசபா தலைவர் திரு. அஜந்தா சங்கர்ராவ் அவர்களின் தலைமையில் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி சேரிட்டபிள் & ட்ரஸ்ட் என்ற சமூக தொண்டு நிறுவனம் வருடம் ஒரு வாசவி கோவில் என்ற திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ஒரு வாசவி அன்னையின் ஆலயத்தை கட்டி தர இருகின்றனர்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக சென்னை அம்பத்தூரில் ஶ்ரீ வாசவி அன்னையின் ஆலயதிற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் மாதம், 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்பிதழ்:

ஜெய் வாசவி!!

மேலும் விழா மற்றும் திருப்பணி பற்றிய செய்தி தொடர்புக்கு:
திரு. T.N. குமார்,
Secretary – Activities,
Sri Kanyaka Paramesweri Charitable Trust,
+91 98410 41451

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய பட்டதாரிகளுக்கு GMR Infrastructure இல் வேலை வாய்ப்பு | ஆர்ய வைஸ்ய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, உலக புகழ் பெற்ற GMR Infrastructure Limited கட்டுமான நிறுவனத்திற்காக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதிதாக டிகிரி முடித்த அல்லது இரண்டு ஆண்டுகள் அனுபவமுள்ள அனைத்து வைஸ்ய பொறியியல் பட்டதாரிகளும் (Except Civil Engg.,) பங்குபெற்று வேலை வாய்ப்பினை பெறலாம்.

Interested Candidates can apply for the GMR Infrastructure Limited – Job Utsav by filling the Online form: https://forms.gle/y5Si3ro3H6c45Tz87

For any queries related to Job Utsav, please contact Dr. R. Sathish Babu – 9944974746, Dr. C. Samudhra Rajakumar – 6383161414, Mr. G. Sivakumar – 9443224136

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமிற்கு, வைஸ்ய பெருமக்கள் அனைவரும் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கோம்பை திரு. ராமசுப்ரமணி அவர்கள், மாநில தலைவர், தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

ஜெய் வாசவி!

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

விடுதலைப் போராட்ட வீரர் சேலம் ஆதி நாராயண செட்டியார் | பண்ருட்டி சொ.முத்துக்குமார்

தமிழகத்தைச் சார்ந்த ஆர்ய வைஸ்யர்கள் நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்திலும் கலந்து கொண்டு சாதனைகள் செய்திருக்கிறார்கள் என்பதை அறியும்போது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது.

சேலம் ஆதிநாராயண செட்டியார் இராஜாஜியின் வலதுகரமாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் பல போராட்டங்களில் கலந்து கொண்டார். பல காங்கிரஸ் மாநாடுகளை திறம்பட நடத்தினார், சேலம் மாவட்ட விவசாயிகளின் வாழ்வு வளம்பெற பல பணிகளையும் இவர் மேற்கொண்டார் என அறியும் போது நம் மனம் மேலும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பில்லை.

இவர் மகாத்மா காந்தியின் அன்பை பரிபூர்ணமாகப் பெற்றவர். பன்முகத் திறமையாளாராகவும் இவர் திகழ்ந்தார். இவரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 1879ஆம் ஆண்டு செல்வந்தர் பட்டாபிராமன் செட்டியாருக்கு மகனாகப் பிறந்தார்.

சென்னை கிருத்துவ கல்லூரியில் பட்டப்படிப்பையும், பின்னர் அயர்லாந்திலும், லண்டனிலும் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

1918ல் சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவுசெய்து கொண்ட இவர், தன் வாழ்நாள் முழுவதும் கதராடை அணிந்து கொண்டு சுதந்திர போராட்டத்திற்கும், சேலம் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கும் பாடுபட்டார்.

சேலத்தில் இவர் வீட்டிற்கு வருகை புரிந்த மகாத்மாகாந்தி இவரின் மகளுக்கு சரோஜினி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

இராஜாஜியின் உற்ற நண்பராகத் திகழ்ந்த இவரைப்பற்றி ஜெயில் டைரி எனும் நூலில் இராஜாஜி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார்.

ரெளலட் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்திலும் முன்னிலை வகித்து கலந்து கொண்டார்.

சைமன் கமிஷன் எதிர்ப்பு போராட்டத்தில்

1923 லிருந்து 1929 வரை இவர் தமிழக சட்டசபை மேலவையில் வட ஆற்காடு மாவட்டத்தின் பிரிதிநிதியாக அங்கம் வகித்து சிறப்பாகப் பணியாற்றினார்.

விவசாயிகளின் வாழ்வு நலம் பெற 1906 ஆம் ஆண்டு சேலம் மத்திய கூட்டுறவு வங்கியை நிறுவினார். நாமக்கல் போன்ற பகுதிகளில் கூட்டுறவு இயக்கங்களை ஆரம்பித்தவரும் இவரே.

Rural Life என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சேலம் மாவட்ட கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என்று கூட இவரை சேலம் மாவட்ட மக்கள் பாராட்டுகின்றனர்.

தன் செல்வத்தையெல்லாம் சுதந்திர போராட்டத்திற்காகவே செலவழித்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது நண்பரான கணித மேதை இராமானுஜன் தன் இளமைக்காலத்தில் நோய்வாய்ப்பட்ட போது தனது மயிலாப்பூர் இல்லத்தில் தங்கவைத்து மருத்துவ உதவிபெற பெருதும் உதவினார்.

பன்முகத்தன்மை கொண்ட இந்த தேசபக்தியாளர் 1937ஆம் ஆண்டு மறைந்தார்.

இவரைப்பற்றி விரிவாக உடுமலைப்பேட்டை திரு. அமிர்தநேயன் அவர்கள் ஒரு சிறு நூலை எழுதியிருக்கிறார்.

இன்னொரு கூடுதலான தகவல் இன்று உலகிலுள்ள ஜீரணத்துறை மருத்துவர்களில் சிறந்தவராகத் திகழ்பவரும் பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், இனிய தமிழில் இனிமையாக அனைவரையும் தன்வசப்படுத்தும் வண்ணம் பேசக்கூடிய சாதனையாளரும், புகழ்பெற்ற கோயமுத்தூர் டாக்டர் வி.ஜி.மோகன்பிரசாத் அவர்களின் தாய்வழிப்பாட்டனார்தான் இவர் என்பதை அறியும் போது நமக்கு பலமடங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா? புலிக்கு பிறந்தது பூனையாகுமா?என்கிற பழமொழி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

சாதனை நாயகனும், விடுதலைப்போராட்ட வீரருமான ஆதிநாராயணச் செட்டியாரை பற்றிய தகவல்களை தந்து உதவிய அவருடைய பேத்தி சேலம் திருமதி. ஜெய ஸ்ரீ ஆதி கேசவன் அவர்களுக்கும், கொள்ளுப் பேரன் திரு. நிர்மல் குமார் அவர்களுக்கும்,அவர்களை தொடர்புகொண்டும் மேலும் பல செய்திகளை சேகரிக்க உதவிய சேலம் திரு. ப.சு.மு. துவாராகநாதன் (Retd KVB manager,) அவர்களுக்கும் நன்றி.

பல வைஸ்ய குல ஆளுமைகளை பற்றி ஆராய்ந்து நம் அனைவருடனும் எளிய நடையில் பகிர்ந்து, நம் இனத்திற்கு பெருமை சேர்க்கும் தமிழ் அறிஞர் பண்ருட்டி திரு. சொ.முத்துக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம்… சப்தஸ்வரதானியம்

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு நல்ல உதாரணம் சிறுதானியங்கள். நம் முன்னோர்கள் தினமும் சிறுதானியங்களால் ஆன உணவு வகைகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ்ந்தனர்.

கம்பு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு போன்ற சிறுதானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.

நம் தலைமுறையினரும் தங்கள் வாழ்வில் சுவை, ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மிக்க சிறு தானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் பல்துறை வல்லுனர் சேலம் செப் குமரேசன் அவர்கள் சப்தஸ்வரதானியம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் சிறுதானியத்தை கொண்டு செய்யக்கூடிய 75 சுவையான ரெசிபிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

சப்தஸ்வரதானியம் புத்தக வெளியீட்டு விழா வரும் ஜூலை மாதம் 31 ஆம் தேதி அன்று சேலம் மாநகரில் Vn. S.R. ரிஷிகேஸ்வரன் அவர்கள் தலைமையில் Engineers Hall இல் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினராக முனைவர். சின்னசேலம் VSG. அரவிந்தன் அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்.

விழா அழைப்பிதழ்:

தங்கள் பிரதிக்கு இங்கே முன்பதிவு செய்துகொள்ளவும்: https://form.jotform.com/222092720839053

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Job Utsav by தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபா

நம் ஆரிய வைசிய சமூகத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களையும், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பிற்காக தயாராக காத்திருப்போரையும் இணைக்கும் முயற்சியினை தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினர் எடுத்துள்ளனர்.

தாங்கள், தங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை தேடுபவர்களாக இருப்பினில் கொடுக்கப்பட்டுள்ள Google Form இல் தங்களின் விவரங்களை பதிவிடுங்கள்: https://forms.gle/y5Si3ro3H6c45Tz87

தொழில் முனைவோர்களே! தங்கள் நிறுவனத்தில் திறமைக்கு பெயர் போன நம் சமூக மக்களை பணியமர்த்த விரும்பினால், கொடுக்கப்பட்டுள்ள Google Form இல் வேலை வாய்ப்பினை பற்றி பதிவு செய்யலாம்: https://forms.gle/xcZ1y6otQkKPC9WLA

வைஸ்ய சமூகத்தினர் அனைவரும் இணைந்து தமிழ்நாடு ஆரிய வைசிய மகாசபாவினரின் இத்தகைய உன்னத முயற்சிக்கு பேராதரவை தந்திடுவோம்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website

For any queries related to Job Utsav, please contact Dr. R. Sathish Babu – 9944974746, Dr. C. Samudhra Rajakumar – 6383161414, Mr. G. Sivakumar – 9443224136

VYSDOM – ஆர்ய வைஸ்யர்களின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group