ஐஸ்கிரீம் உலகில் காப்புரிமையை பெற்ற ஆர்ய வைஸ்யர்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் தின்பண்டம் ஐஸ்கிரீம். வெண்ணிலா, சாக்லேட் எனப் பல வகையான ஐஸ்கிரீம்கள் உள்ள நிலையில் அவற்றிலிருந்து மாறுபட்ட மூலிகை ஐஸ்கிரீம் என்னும் புதிய வகையை நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த டாக்டர்.திரு.செஃப். குமரேசன் கோகுலநாதன் அவர்கள் கண்டுபிடித்து காப்புரிமையை பெற்றுள்ளார்.

சேலம் மாநகரை சேர்ந்த குமரேசன் அவர்கள் ஐஸ்கிரீம் வகைகளில் சாதனை புரிய வேண்டும் என முயற்சித்து முழுக்க முழுக்க ஆர்கானிக் பொருட்களை கொண்டு “ஹெர்பல் குல்ஃபி”யை தயாரித்துள்ளார்.

இவரின் “ஹெர்பல் குல்ஃபி” பெற்றோர்களுக்கு குறிப்பாக தாய்மார்களுக்கான ஒரு முக்கிய கண்டுபிடிப்பாகும். ஏனெனில் ஐஸ்கிரீமினால் குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை எதிர்கொள்ள மருந்தாக உட்கொள்ளும் வகையில் சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், துளசி, புதினா மற்றும் தேன் போன்ற பாரம்பரிய ஆயுர்வேத பொருட்களை கொண்டு “ஹெர்பல் குல்ஃபி” தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மருத்துவ குணங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

மேலும் தூய நாட்டு பசும்பால் மற்றும் பாதாம் போன்ற அடிப்படை பொருட்கள் உடலுக்கு தேவையான கால்சியம் மற்றும் புரதச் சத்தினை வழங்குவதால் எலும்புகள் வலுப்பெறும். இனிப்பு சுவைக்கு பயன்படுத்தியுள்ள மலைத் தேன் இரும்புச்சத்தினை அளிக்கிறது. வெள்ளை சர்க்கரை, பதப்படுத்தும் மற்றும் வேதிப் பொருட்கள் இதில் அறவே இல்லை.

எந்த வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் மிகவும் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்கிரீம், செஃப். திரு. குமரேசன் கோகுல்நாதன் அவர்களின் இரண்டு வருட கடுமையான முயற்சிக்கு பிறகு, பல மருத்துவர்களின் மேற்பார்வையில் தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு இந்திய அரசின் காப்புரிமையும் பெற்றுள்ளது.

மிக விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் இந்த அற்புதமான மூலிகை ஐஸ்கிரீமை கண்டுபிடித்த செஃப். திரு. குமரேசன் கோகுல்நாதன் அவர்கள் மேலும் ஆர்கானிக் குக்கீஸ் மற்றும் பல ஐஸ்கிரீம் வகைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் மென்மேலும் உலக அளவில் பல சாதனைகள் புரிய வைஸ்ய மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைசியர்கள் கொண்டாடிய வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை பூஜை

ஆரிய வைசியர் வரலாறு – ஆரிய வைசிய பூஜைகள்

நம் வைஸ்ய பெரியவர்களால் காலம் காலமாக கொண்டாடபட்டு வந்த துவாதசி பாரணை பூஜை அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

சில வைணவ பெரியவர்கள் இதை ஒவ்வொரு ஏகாதசி அன்றும் கடைபிடிக்கிறார்கள்.

சில வைசியர்கள் இதை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் கடைபிடிகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி அன்று விரதமிருப்பவர்கள் மறுநாள் துவாதசி காலை துயில் எழுந்து குளித்து பெருமாள் பூஜை செய்து. துளசி தீர்த்தம் உட்கொண்டு அதன்பின் அகத்தியக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியன அடங்கிய உணவுகளை உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்வார்கள். இதனை துவாதசி பாரணை என்று கூறுவார்கள்.

துவாதசி பாரணை பூஜை மகிமை

இதில் அகத்தியக்கீரை சிவனின் அம்சமாகவும் அட்டமா சக்திகளை தரும் போதி சக்தியாகவும், நெல்லிக்காய் மகாலட்சுமியின் அம்சமாகவும் சகல சம்பத்துக்களையும் தரும் பொருளாகவும். சுண்டைக்காய் சரஸ்வதியின் அம்சமாகவும் ஆத்ம சுத்தியை வழங்கும் பொருளாகவும் இருப்பதால் இதை மூன்றையும் சேர்ந்து உண்ணும் போது ஏற்படும் கிரகிக்கும் சக்தியை ஏற்கனவே வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்த உடலானது முழுவதும் பெற்றிருக்கும். அதனால் உடலுக்கு ஞானம். போகம் என இரண்டு வித சக்திகளும் கிடைக்கிறது.

இந்த சம்பிரதாயங்கள் அனுஷ்டிக்கும் விதிகள் பற்றி வேதாந்த சாஸ்திரத்தில் கர்மகாண்டத்தில் கூறப்பட்டுள்ளது.

துவாதசி பாரணையில் கடைபிடிக்க கூடாத சில விதிகள் உள்ளன அதை பற்றி பூர்வ மீமாம்சை எனும் சாத்திரத்தில் ஜைமினி முனிவர் வழங்கியுள்ளார் அது என்னவென்றால்…

வாழை சம்பந்தப்பட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.. வாழைஇலையில் உட்கொள்ள கூடாது.

கத்திரி, புடலைங்காய், பாவக்காய் ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

கடலை துவரம் உளுந்து பருப்புகள் தவிர்த்தல் வேண்டும்..

கடுகு மிளகாய் கொத்தமல்லி தனியா புளி ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

எள் நல்ல எண்ணை/ கடலை எண்ணை ஆகியன தவிர்த்தல் வேண்டும்.

கொடுத்த வாக்கினை மாறுபவர்கள் மறந்தும் இந்த வைகுண்ட ஏகாதசி துவாதசி பாரணை செய்யக்கூடாது என்பது சாஸ்திர விதி. அவ்வாறு செய்தால் அவர்கள் குலமே அவர்களை அழிக்கும்படி செய்துவிடுமாம் இதை உத்திர மீமாம்சை எனும் சாஸ்திரம் தெளிவாக குறிப்பிடுகிறது.

துவாதசி பாரணை பூஜையில் அனுசரிக்க வேண்டியவைகள்:

வாழை இலைக்கு பதிலாக தாமரை இலை/ பாக்கு மட்டையில் உணவு உண்ண வேண்டும்..

நெய்யிலோ அல்லது தேங்காய் எண்ணெயில் உணவு சமைக்க வேண்டும்..

முதலில் பிரம்மச்சாரிகளுக்கு, பின் ஏழைகளுக்கு அதன் பின் அனாதைகளுக்கு உணவளித்து பின்னர் தான் நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.

அனுசரிக்க வேண்டிய வைசிய குல கோத்திரங்கள்

துவாதசி பாரணை பூஜையை கீழ்கண்ட நம் வைசிய குல கோத்திரத்தார் பின்பற்ற வேண்டியது அவசியம்…

குறிப்பாக நம் வைசியர்களில் மிதுன மைத்ர குல, நாபிள்ள குல, எலிசெட்ல, புதனகுல, வெண்ணகுல, வினுகுல, மோர்குல, பத்மசெட்ல, சந்திரகுல, மவுஞ்சிகுல, சிரிசெட்ல, பீமசிஷ்ட, விபரிசெட்ல, வசந்தகுல, தனந்தகுல, காமிசெட்ல, கொண்டகுல, ஸ்ரீலகுல, இலமஞ்சி குல, சாணகுல, டங்காரகுல, சாமிசெட்ல, ரெண்டகுல, புச்சகுல, ப்ரோவுட குல, ஹஸ்தகுல, கொரட்டகுல கோத்திரத்தார் அனைவருக்கும் இந்த விரதத்தை அனுசரிக்க வேண்டும்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி – 2

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப் பதிவு 2

தெய்வங்களின் திருவடிகள் தீண்டப்பெற்ற கடலாடியின் பெயர்க்காரணத்திற்கான புராண வரலாறுகளை பற்றி கண்டு வருகிறோம்!

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப் பதிவு 1

சிவபெருமானின் பாதம்

எல்லோர்க்கும் இறைவனான சிவபெருமான் இவ்வூரின் அருகிலுள்ள பருவதமலையில் பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜீனராக கோயில் கொண்டுள்ளார்.

பருவதம் என்றால் மலை அதாவது மலைகளுக்கெல்லாம் மலை இன்னும் விளக்கமாக சொன்னால் மலைகளுக்கெல்லாம் அரசன் என்று பருவதமலையின் பெயர்க்குறிப்பு விளக்கம் பற்றி சங்ககால நூலான மலைபடுகடாம் இந்த மலையின் பெயர்க்காரணம் பற்றி கூறுகிறது.

கடலாடியில் கால்தடம் பதித்த பின்னரே பருவதமலையில் சிவபெருமான் கோயில் கொண்டார் என புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொல்லிமலை, சதுரகிரிமலை என சித்தர்கள் வாழும் மலைகளின் வரிசையில் போற்றப்படுகின்ற மலை பருவதமலை. சிவபெருமான் இவ்விடத்தில் கால்தடம் பதித்து சென்றதால் சித்தர் பெருமக்களும் சிவனின் காலடியை இங்கு வணங்கிய பின்னரே பருவதமலை செல்வதாக ஐதீகம்.. ஆக சிவபெருமான் மற்றும் அவரை வணங்கும் சித்தர்பெருமக்களின் கால்தடமும் பதிந்து புண்ணியம் பெற்ற தலமே கடலாடி.

பருவதமலையில் உள்ள சித்த மூலிகைகளின் வாசமும், பருவதமலையில் உள்ள மல்லிகார்ஜீன சிவபெருமானின் அருட்பார்வையும் கடலாடி ஊரை நோக்கியே அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு.

காமாட்சியின் & முருகனின் திருப்பாதம்

இத்தலம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் வரலாற்றோடு தொடர்புடையது. அந்த வரலாற்றை காண்போம், ஒரு சாபத்தின் காரணமாக பூவுலகில் மாங்காடு வந்து சிவனை நோக்கி தவம் செய்து கொண்டிருக்கிறார் பார்வதி அன்னை.

இறைவன் பிரதியட்சமாகி காஞ்சிபுரம் வந்து தவம் மேற்கொள்ள சொன்னார். அங்கே காஞ்சிபுரத்தில் திருவண்ணாமலை வந்து தவம்புரிந்து எனை அடைவாய் என மலர்ந்தார். அப்படி காஞ்சிபுரத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் வழியில் பார்வதி அன்னைக்கு தாகம் எடுத்ததால் மகன் முருகனை அழைத்தாள் அன்னை.

அன்னையின் நினைத்த மாத்திரத்தில் அன்னையின் திருவடி தொழுது பார்வதி அன்னையின் எண்ணத்தை உணர்ந்து அருகிலிருந்த ஜவ்வாது மலையை நோக்கி வேலெறிந்தார்.

முருகப்பெருமான் எறிந்த வேலின் வினைப்பயன் என்ன?? – அடுத்த பதிவில்! Stay Tuned!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தமிழகத்தின் பெனுகொண்டா – கடலாடி | பகுதி 1

ஆரிய வைசியர் வரலாறு – சிறப்புப்பதிவு 1

எந்த ஒரு தெய்வகாரியமும், தெய்வ சங்கல்பம் இல்லாமல் அவனுடைய அனுக்கிரஹம் இல்லாமல் நடைபெறுவதில்லை!!!. பலமுறை நான் சிந்தித்தது உண்டு சிறுநகரத்தில் இவ்வளவு பொருட்செலவில் வாசவி ஆலயம் தேவையா என?? ஆனால் அதில் தெய்வ சங்கல்பம் உள்ளதின் அவசியத்தை பலபேர் அறிய மாட்டார்கள். ஆம் அன்னையின் அனுக்கிரஹம் இவ்விடத்தில் இல்லாமல் அன்னை இங்கு வர சம்மதித்து இருப்பாளா???

வாசவி அன்னையே இங்கு வர விருப்பம் அல்லது சங்கல்பம் கொள்ளும் அளவிற்கு இவ்விடத்தில் அப்படி என்ன இருக்கிறது?? வாருங்கள் கடலாடியின் புராணம் முதற்கொண்டு வரலாறுகளை பார்ப்போம்.

கடலாடி எனும் கடவுளின் அடி

கடலாடி எனும் ஊரிற்கான பெயர்க்காரணம் ஆராய்ந்தால் கடவுள் அடி எனும் பெயர் மருவி கடலாடி ஆனதாக புராண சான்றுகள் கூறுகின்றன..

அப்படி எந்த கடவுளின் அடி இங்கே இருக்கிறது என கேட்கிறீர்களா?? ஒன்றல்ல இரண்டல்ல மூன்று தெய்வங்களின் காலடிகள் மட்டுமல்லாமல் சித்தர்களின் காலடி தடங்களும் இங்கே பதிந்துள்ளன. என்னாச்சரியம் ஆம்…!!

  • சிவபெருமான்
  • காமாட்சி அன்னை
  • முருகப்பெருமான்

என மூன்று பெரும் தெய்வங்களின் காலடிகள் இங்கே பதிந்துள்ளன.. அதனால் தானோ என்னவோ கடவுள் அடி என பெயர் பெற்று பின்னர் இப்பகுதி கடலாடி என மாறியது.

கடலாடி – கடவுளின் அடியை தன்னுள் கொண்ட புண்ணிய தலம்

அது சரி சிவபெருமான், பார்வதி, முருகப்பெருமான் ஆகிய தெய்வங்களின் காலடிகள் இங்கே பதிந்துள்ள புராண வரலாறை பார்ப்போம்.

தமிழகத்தின் பெனுகொண்டா தொடரும் Stay Tuned!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

Author – பென்னாகரம் திரு. பாலா வெங்கட்ராமன்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

வைஸ்ய மாணவர்களே! சிகரத்தை தொடுங்கள்!!

இன்றைய மாணவர்களே நாளைய சமுதாயம். நம் ஆர்ய வைஸ்ய மாணவ செல்வங்களுக்கும், நம் வைஸ்ய சமூகத்திற்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் “சிகரம் தொடுவோம்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறையை தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியினர் நடத்த உள்ளனர்.

டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியன்று சேலம் வைஸ்ய கல்லூரியில் நடக்கவிருக்கும் இந்த கருத்தரங்கில் பல அறிஞர்கள் கலந்து கொண்டு வேதம் முதல் விஞ்ஞானம் வரை பல தலைப்புகளில் உரையாடி இளம் வைஸ்ய மாணவர்களின் மனதில் சாதிக்க தூண்டும் சிந்தனையை எழுப்ப உள்ளனர்.

8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், சிகரம் தொடுவோம் பயிற்சி பட்டறையின் முக்கியத்துவத்தை அறிந்து தங்களின் குழந்தைகளை கலந்து கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியின் மாநில தலைவர் திரு. ராஜேஷ் குப்தா அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

Click Here to Register for the event

Limited Seats. Registration will be closed on 16th December 2022.

சக்திவாய்ந்த நாளைய வைஸ்ய சமூகத்தை உருவாக்கும் இன்றைய இளைஞரணியின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

300 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் ஶ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி ஆலயம் | SKPC டிரஸ்ட்

ஆந்திர மாநிலத்தில் உள்ள பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அவதரித்த வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில்கள் தமிழகம் முழுவதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உள்ளன.

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரை பொறுத்தவரை நம் முன்னோர்களால் 1720 ஆம் ஆண்டில் கொத்தவால் சாவடி என்னும் இடத்தில் ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மனின் திருக்கோவில் நிறுவப்பட்டது.

தற்பொழுது, சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு பின் Sree Kanyaka Parameswari Charitable Trust (SKPC) குழுவின் முயற்சியின் வாயிலாக சென்னை மாநகரில் உள்ள அம்பத்தூரில் ஶ்ரீ வாசவி அம்மனின் திருக்கோவில் கட்டும் பணி வெகுசிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

ஆர்ய வைஸ்ய சமூக பெருமக்கள் பெருவாரியாக வசித்து வரும் சென்னை மாநகரின் அனைத்து திசைகளிலும், தமிழ்நாட்டில் நம் சமூக மக்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் ஶ்ரீ வாசவி தேவியின் ஆலயங்களை கட்டுவதை நோக்கமாக கொண்டுள்ள SKPC Trust பற்றி டிரஸ்டின் நிர்வாக செயலாளர் திரு. P. சேஷாத்ரி அவர்கள் கூறியதாவது:

Sree Kanyaka Parameswari Charitable Trust இல் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பெரு வள்ளல்களும், அறிஞர்களும், கட்டிட கலை நிபுணர்களும், வாஸ்து சாஸ்திர வல்லுனர்களும், சமூக ஆவலர்களும் வைஸ்ய சமூக மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து, தன்னலம் கருதாமல் உழைத்து வருகின்றனர்.

ஒரு ஆலயத்தை நிறுவி கும்பாபிஷேகம் செய்தபின், அக்கோவிலின் நிர்வாகத்தை அந்த ஊரில் உள்ள ஆர்ய வைஸ்ய மக்களுக்கு SKPC டிரஸ்ட் அளித்துவிட்டு அடுத்த கோவிலை கட்டுவதற்கான பணியை தொடங்கிவிடும்.

வைஸ்யர்கள் வாழும் அனைத்து ஊர்களிலும் அன்னை ஶ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மனிற்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் செயல்படும் SKPC டிரஸ்ட், தனது அனைத்து வரவு, செலவுகளையும் பொதுவெளியில் வெளியிட்டு வந்துள்ளது.

தாங்கள், SKPC டிரஸ்டிற்கு நன்கொடை அளிக்க விரும்பினால், மேற்கண்ட QR code வாயிலாக நன்கொடை அளிக்கலாம்:

UPI ID: SKPCT.05@cmsidfc

நம் வைஸ்ய சமூக மக்களை ஒன்றிணைக்க ஓயாது உழைக்கும் SKPC ட்ரஸ்டின் இத்தகைய பெரு முயற்சிக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

திரு. சேஷாத்ரி அவர்கள்

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

தமிழக அரசியலில் ஆளுமைமிக்க வளரும் தலைவர்களாக கலக்கும் வைஸ்ய சமூகத்தை சார்ந்த இரு நண்பர்கள்!

நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் இன்று ஒரு கட்சியின் முக்கிய பொறுப்புகளை அலங்கரிப்பது நம் சமூகத்திற்கு பெருமை.

ஜி.பிரதீப் மற்றும் எஸ்.ஜி சூர்யா இருவரும் கோவையில் பிறந்து வளர்ந்து இன்று ஒரு கட்சியின் ஆளுமை மிக்க வளரும் தலைவர்களாக மாறியிருக்கிறார்கள்.

அவர்கள் கடந்து வந்த பாதை:

கோவையில் உள்ள நம் வாசவி வித்யாலையா பள்ளியில் தங்களின் பள்ளி படிப்பை தொடங்கிய இவர்கள் மிக இளம் வயதிலேயே தங்களின் தனித்திறமைகளால் தனித்துவம் மிக்க மாணவர்களாக திகழ்ந்தனர். பள்ளியின் சார்பில் நிகழும் பலதரப்பட்ட போட்டிகளிலும் பங்கேற்பது, மாணவர்கள் குழுக்களை வழிநடத்துவது என மழலையாக இருந்த போதே இவர்களுக்குள் மாசற்ற தலைமைபண்பு தலைத்தோங்கியிருந்ததை இன்றும் வாசவி வித்யாலையா பள்ளியின் ஆசிரியர்களும், நண்பர்களும் வியந்து சொல்வதுண்டு.

வாசவி வித்யாலயா மேல்நிலை பள்ளி வளாகம்

பள்ளி பருவத்திலேயே மாணவர் தலைவராக இருந்தவர் எஸ்.ஜே சூர்யா, நண்பரோடு தோள் நின்றவர் பிரதீப். அந்த வளரிளம் பருவத்திலேயே தனித்துவமான திட்டங்களை பள்ளியில் புகுத்தியவர்கள். இளைஞர் பாராளுமன்றம் அமைத்தல், தமிழ், ஆங்கிலம் என் பல்வேரு சங்கங்கள் அமைத்தல் என பல புதிய புதுமைகளை அப்போதே தொடங்கியவர்கள் இவர்கள்.

பிரதீப் பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியிலும், சூர்யா பி.எஸ்.ஜி கலை கல்லூரியிலும் தத்தம் இளநிலை படிப்படி பயின்றனர். கல்வியின் பாதையில் இருவேறு கிளைகளை இருவரும் தேர்வு செய்திருந்தாலும், சிந்தனையில் ஒன்றாக பயணித்தவர்கள் என்பதால் “யூத் ஹெல்பிங் ஹெண்ட்ஸ்” என்ற சமூக சேவை அமைப்பில் இருவரும் சேவை செய்து வந்தனர். பின்பொரு கட்டத்தில் நாமே ஏன் இது போன்ற ஒரு லாப நோக்கமற்ற அமைப்பை தொடங்க கூடாது? என்ற சிந்தனையில் இவர்கள் தொடங்கியது தான் “சிக்ஸ்த் சென்ஸ்” பவுண்டேஷன். இந்த சிந்தனை உதித்த போது அவர்கள் யாருக்கும் இன்னும் 18 வயது கூட பூர்த்தியாகி இருக்கவில்லை. எனவே அந்த வயது பூர்த்தியாகும் நாள் வரை காத்திருந்து இந்த அமைப்பை பதிவு செய்தனர். பின்னர் கோவை முழுவதிலும் உள்ள ஆனாதை இல்லங்களுக்கு தன்னார்வத்துடன் சென்று சேவை செய்து வந்தனர்.

படிக்க இயலாத குழந்தைகளுக்கு அன்றைய நாளில் தெரிந்தவர்களிடம் வசூலித்து கல்வி கட்டணம் செலுத்துதல் தொடங்கி இன்று வரை அதை நேர்த்தியான முறையில், முறையான செயல்வடிவத்தோடு செய்து வருகின்றனர். இதுவரையில் சிக்ஸ்த் சென்ஸ் மூலம் உதவி பெற்றவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டும். இதில் பலர் கல்வி படிப்பை முடித்த பெரிய நிறுவனங்களின் பணியிலும் இருக்கின்றனர். கல்வி உதவிகள் தவிர்த்து, சூழலியல் காக்கும் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முன்னெடுத்தது சிக்ஸ்த் சென்ஸ்.

கல்லூரி நாட்களிலிருந்தே பாஜகவின் கொள்கைகளின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக வலம் வந்த இளைஞர்கள் இவர்கள். பாஜகவின் சித்தாந்தங்கள் குறித்து அப்போதே வெளி உலகிற்கு அவர்களால் முடிந்த அளவில் எடுத்து செல்ல தொடங்கினார். பின் பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களுக்கு இருவரும் பயணமானார்கள்.
ஆனால் இணைய உலகின் இணைப்பின் காரணமாகவும், ஒரே எண்ணவோட்டம் இருந்ததாலும் அடுத்த கட்டத்திலும் சேர்ந்தே பயணித்தனர். ஆம்! அப்படி வந்தது தான் நியுஜென் தமிழன் எனும் இணைய பத்திரிக்கையின் ஆசிரியர் குழு வாய்ப்பு. நியு ஜென் தமிழன் எனும் பத்திரிக்கை ஒரு தனிப்பட்ட சுற்றுக்கு அனுப்பப்படும் பத்திரிக்கை. இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவை இருவரும் கவனித்து வந்தனர்.

இந்த பணி குறித்து பிரதீப் அவர்கள் சொல்லும் போது “நான் இந்த பத்திரிக்கையில் பெரும்பாலும் எழுதியது பாஜகவின் ஆளுகை சார்ந்த விஷயங்களை. காரணம் நான் சூரத்தில் பணியாற்றி வந்த போது அங்கிருந்த உள்கட்டமைப்பு, அரசு சேவைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இந்த தன்னிகரற்ற ஆளுகைக்கு யார் காரணம் என பார்த்த போது குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி அவர்கள் எங்களின் முன் மாதிரியாக திகழ்ந்தார். ஆனால் சூர்யா, பாஜகவின் கொள்கை, சித்தாந்தத்தின் பால் ஈர்க்கப்பட்டவர். கல்லூரி நாட்கள் முதலே போராட்டங்களில் கலந்து கொள்வது, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் இறங்கி பணியாற்றியவர். மேற்படிப்புக்காக அவர் பூனே சென்ற போது அப்போதே சமூக ஊடகத்தில் மிக துடிப்பாக பதிவுகளை பதிந்தவர்.

2014 ஆம் ஆண்டில் அவருக்கு நரேந்திர மோடி அவர்களை சந்திக்கும் வாய்ப்பும், அதை தொடர்ந்து அப்போது நடந்த தேர்தலில் சமூக ஊடக பிரிவில் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபடும் ஆர்வம் சூர்யாவுக்கு வந்தது. அவருடைய படிப்புக்கு பின் அப்போது மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியாளராக பணியில் சேர்ந்தார் சூர்யா. நான் தொடர்ந்து இந்த பத்திரிக்கைக்கு எழுதி வந்தேன்.” என்றார் அவர்.

தமிழக பாஜகவிற்கு 2016 கால கட்டத்தில் சமூக ஊடகம் என்பது புதிய களமாக இருந்தது. மேலும் சூர்யா அவர்கள் மத்தியில் பொறுப்பில் இருந்ததால், பிரதீப் அவர்களுக்கு தமிழக பாஜகவின் தலைவர்கள் அறிமுகம் கிடைக்கவே.. அவர்களுக்கான சமூக ஊடக கணக்குகளை உருவாக்குவதல், வடிவமைத்தல், நிர்வகித்தல் போன்ற பொறுப்புகள் பிரதீப் அவர்களை வந்து சேர்ந்தது.

இந்த பணிகளை எல்லாம் உன்னிப்பாக கவனித்த மேலிடம், 2016 இல் சமூக ஊடக பிரிவுக்கான குழுவை அமைக்கும் பொறுப்பை சூர்யாவிடம் ஒப்படைத்தது. அதனை தொடர்ந்து சமூக ஊடக பிரச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதை இருவரும் நிர்வகித்து வந்தனர்.

அரசியல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக சூர்யா தமிழக பாஜகவின் இளைஞர் அணியின் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார். பிரதீப் தன்னுடைய தனிப்பட்ட தொழில் வாழ்க்கைகாக பதவிகளிலிருந்து விலகி, கட்சி ரீதியான பணிகளை தொடர்ந்து செய்து வந்தார்.

மேலும் அந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பணியாற்றிய போது சூர்யாவிற்கு பல்வேறு முன்னனி தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. நிர்மலா சீத்தாராமன், பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து ஜெயலலிதா அம்மையார் மறைந்த பின்னர், தமிழகத்தில் பாஜக பல்முனை தாக்குதலுக்கு ஆளானது. மத்தியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் இங்கே கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. அப்போது தான் பாஜகவிற்கு என்று ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு தளம் தேவை என்பதை உணர்ந்தோம்.

அந்த சிந்தனையின் ஓர் அங்கமாக தொடங்கப்பட்டது தான் கதிர். 2018 ஆம் ஆண்டில் பூஜ்ஜியம் பின் தொடர்பாளர்களுடன் தொடங்கப்பட்ட இணைய பத்திரிக்கை. இன்று இதன் வளர்ச்சி பிரம்மாண்டமானது. பேஸ்புக், டிவிட்டர், ஸ்னேப் சாட், கூ உள்ளிட்ட பல சமூக ஊடகங்களில் 1 லட்சம் பின் தொடர்பாளர்களை தொட இருக்கிறது. இந்த பத்திரிக்கையை தற்போது 30 – 40 லட்சம் படிக்கிறார்கள், 3 கோடி ஹிட்ஸ் வரை தற்போது சாதரணமாக தொட முடிகிறது.

ஊடகத்துறையை தொடர்ந்து, சிந்தனை களம் ஒன்று வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு ரிசர்ச் பவுண்டேஷன் என்ற ஒன்றை தொடங்கினோம், இங்கே அறிவார்ந்த சிந்தனைகள், எண்ணங்கள் கருத்தரங்கங்களாக, விவதாங்களாக, ஆய்வுகளாக மேற்கொள்ளப்படும்.

இந்த அமைப்பின் மூலம் புத்தகங்கள் உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை வெற்றிகரமாக செய்து உள்ளனர். அன்று ஆரம்பபுள்ளியாக கதிரை தொடர்ந்து இன்று பாஜகவை ஆதரிக்கும் ஏராளமான ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

Click here and Join Kathir Facebook Page

சமூக ஊடகம் மற்றும் இணைய ஊடகத்தில் தமிழக பாஜகவிற்கான ஆணிவேரை அமைத்து கொடுத்ததில் பெரும் பங்களிப்பு இவர்களுடையது. அப்போது கட்சியில் தொழில்நுட்ப பிரிவு என்ற ஒன்றே இருந்திருக்கவில்லை. 2016 தேர்தலுக்கு பின் சூர்யா அவர்களின் வழிகாட்டுதலில் தொழில்நுட்ப பிரிவுக்கான ஆரம்ப புள்ளி தொடங்கப்பட்டது இன்று அது விருட்சமாக வளர்ந்து கிளை விரித்திருக்கிறது.

அரசியலின் வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறினார் சூர்யா, தன்னுடைய 20 களில் கட்சியின் இளம் செய்தி தொடர்பாளர் ஆனார், அடுத்து அண்ணாமலை அவர்கள் பதவியேற்ற பின், கட்சியின் இளம் மாநில செயலாளராக வளர்ந்திருக்கிறார். இதனை தொடர்ந்து பிரதீப் அவர்கள் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சமீபத்தில் அவருக்கு தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்வில் பீடு நடை போடும் இவர்கள் வரித்து கொண்டிருக்கும் தத்துவம் ஒன்றே ஒன்று தான், இவர்களை பொருத்தவரை அரசியல் என்பது நீடிக்கப்பட்ட ஒரு சேவை. தனிநபராக இவர்களால் பல ஆயிரம் பேருக்கு சேவை செய்ய முடியுமெனில், அரசியலில் இருப்பதன் மூலம் லட்சக்கணக்கான பேருக்கு சேவையாற்ற முடியும் என்பதை தாண்டி, ஆட்சி, அதிகாரம், பணபலம் என வேறு எந்த நோக்கமும் அற்ற சிந்தனையாளர்களாக, அரசியல் ஆளுமையாக திகழ்கிறார்கள்.

இந்த இளம் வயதில் மக்கள் நலனை தங்களின் நலனாக வரித்து வளர்ந்த இளம் தலைவர்கள்/நண்பர்கள் நம் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பது நமக்கு பெருமை கலந்த மகிழ்வு. அவர்களின் பணி சிறக்க நம் வாழ்த்துகள்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயா் வகுப்பினருக்கு கிடைத்த 10 சதவீத இடஒதுக்கீட்டின் வரலாறு | SG Suryah, மாநில செயலாளர், பாஜக

நம் ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளம் அரசியல் தலைவர் SG சூர்யா அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். திரு. சூர்யா அவர்கள் “இப்படித்தான் வந்தது இட ஒதுக்கீடு” என்கிற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை உங்கள் பார்வைக்காக.

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், இட ஒதுக்கீட்டில் வராத ஜாதியில் உள்ள ஏழைகள் தொடா்ந்து வறுமை நிலையிலேயே உள்ளனா். ஜாதியை காரணம் காட்டி அவா்களுக்கு எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால், இட ஒதுக்கீட்டில் வராத ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. பல கட்ட எதிா்ப்புக்கு பிறகு மத்திய அரசின் முடிவு சரியே என உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதன் பின்னணி என்னவென்று விரிவாக பாா்ப்போம்.

சுதந்திரத்திற்கு முன்பு இட ஒதுக்கீடு: பனகல் ராஜா தலைமையிலான நீதிக்கட்சி அரசு, 1921-இல் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை (வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்) கொண்டு வந்தது. இதற்கான முதல் அரசாணையை (எண் 613) மதராஸ் மாகாண அரசு பிறப்பித்தது.

அந்த ஆணையின்படி பிராமணா் அல்லாதவா்களுக்கு 44 %, பிராமணா்களுக்கு 16 %, முஸ்லிம்களுக்கு 16 %, ஆங்கிலோ இந்தியன் மற்றும் கிறிஸ்துவா்களுக்கு 16 %, பட்டியல் இனத்தவா்களுக்கு 8 % என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அப்போதிலிருந்து இட ஒதுக்கீட்டுக் கொள்கை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் இட ஒதுக்கீடுக்கான சட்டமியற்றும் முதல் மாகாணம் ஆனது. இது நாடு முழுவதும் நிலையானதாகி விட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு இட ஒதுக்கீடு: 1954-ஆம் ஆண்டில், கல்வி அமைச்சகம் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 20 % இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1982-ஆம் ஆண்டில், பொதுத்துறை மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் 15 % மற்றும் 7.5 % காலியிடங்கள் நிறுவனங்களில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

1979-இல் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. சமூகத்தில், கல்வியில் பின்தங்கிய வகுப்பினரின் நிலைமையை மதிப்பிடுவதற்காக நிறுவப்பட்டது. அப்போது சரியான மக்கள்தொகை புள்ளி விவரங்கள் இல்லை. எனவே 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகளைப் பயன்படுத்தியது.

1987-ஆம் ஆண்டில், மண்டல் கமிஷன் அறிக்கை அமலுக்கு வந்தது. அதுவரை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே இருந்து வந்த இட ஒதுக்கீடு ஓ.பி.சி பிரிவினருக்கும் கிடைத்தது. தற்போது மத்திய அரசின் அரசின் இட ஒதுக்கீடு கல்வி நிலையங்களிலும், அரசு மற்றும் அரசு சாா்ந்த துறைகளில் வேலை வாய்ப்பில் பட்டியல் சமூகத்தினா் மற்றும் பட்டியல் பழங்குடிகளுக்கு (எஸ்சி, எஸ்டி) முறையே 15 % மற்றும் 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்களுக்கு (ஓபிசி) 27.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் இது வேறுபடும். உதாரணமாக, வட கிழக்கு மாநிலங்களில் பட்டியல், பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கீடு அதிகமாக இருக்கும். தமிழகத்தில் அது குறைவாக இருக்கும்.

முதலில் சொன்னவா் எம்.ஜி.ஆா்.: ஜாதி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீடுகளோடு சோ்த்து, பொருளாதார ரீதியாக பின் தங்கியவா்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எம்.ஜி.ஆா். ஆட்சிக்காலத்தில் இருந்தே முன்வைக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையை தாண்டி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கருத்தை முதலில் சொன்னவா் எம்.ஜி.ஆா்.

1979 ஆகஸ்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வா் எம்.ஜி.ஆா். பேசுகையில் அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா்ஜாதி ஏழைகளுக்கு பொதுப்பிரிவில் உள்ள 51 %-இல் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பேசினாா். எம்.ஜி.ஆா். உயா் ஜாதி என்பதால் இப்படி அக்கறை காட்டுவதாக அப்போதைய எதிா்க்கட்சி தலைவா் கருணாநிதி விமா்சனம் செய்தாா்.

ஆனால் அவரே, அந்த யோசனையை சென்னையில் 1979 ஆகஸ்ட் 12-இல் அளித்த பேட்டியின்போது வரவேற்றாா். ‘எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு பொதுப்படையாக உள்ள 51 %-இல் இருந்து 15 % முதல் 20 % வரை இட ஒதுக்கீடு வழங்கலாம். இந்த யோசனையை அரசு ஏற்குமானால் பிரச்னைக்கு இடமே இல்லை’ என்று கருணாநிதி கூறினாா். ஆனால் அந்த யோசனை குறித்து அதற்குப்பின் அரசு விவாதிக்கவில்லை.

பொருளாதார நிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்பு சட்டம் 124-ஆவது திருத்த மசோதா 2019-இல் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டது. இது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 % கூடுதல் இடஒதுக்கீட்டை வழங்கியது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் எவா் என்பது அவ்வப்போது அரசால் வரையறுக்கப்படும். ஆண்டுக்கு எட்டு லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவா்களும் ஐந்து ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்பவா்களும் இந்தப் பிரிவில் வருவாா்கள் என்று வரையறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று அம்மசோதா நிறைவேற்றப்பட்டது.

பொதுப் பிரிவினரில் ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீட்டு சட்டம் ஜனவரி 14, 2019 முதல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத் திருத்தத்தின்படி உயா்சாதி பிராமணா், ராஜபத்திரா் (தாகுா்), ஜாட், மராத்தா, பூமிஹா், ஜெயின், நகரத்தாா் போன்ற சமூகங்களைச் சோ்ந்த ஏழைகள் பயனடைவா். இதனை எதிா்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், இந்த இட ஒதுக்கீடு செல்லும் என்பது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் தவிர பெரும்பான்மையான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு பொதுப்படையாக ஒதுக்கீடு கிடைக்கும் என்றால், தான் ஆதரிப்பதாக கருணாநிதி அன்றே உறுதி அளித்தாா். ஆனால் சமூகநீதி என்று கூறிக்கொண்டு வரலாறு தெரியாமல் அரசியல் செய்யும் நோக்கில் தி.மு.க இதனை எதிா்க்கிறது.

Source: தினமணி

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

EWS 10% இடஒதுக்கீட்டை மாநில அரசு அமல்படுத்த தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவர் கோரிக்கை

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை விரைவில் அமல்படுத்த வேண்டும் என தமிழக மாநில அரசிற்கு தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபை தலைவர் திரு. ராமசுப்பிரமணியம் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபாவின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா செவ்வாய்பேட்டை ஶ்ரீ வாசவி மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஆர்ய வைசிய மகா சபை தலைவர் திரு. ராமசுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் திரு. சீனிவாசன், மாநில துணை தலைவர் திரு. நடராஜன் அவர்கள், மாநில பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பதவியேற்பு விழாவினை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஆர்ய வைசிய மகா சபை தலைவர் திரு. ராமசுப்பிரமணியம் அவர்கள் கூறியதாவது:

ஆர்ய வைசிய சமூகத்தில் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் அதிகம் உள்ளனர். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு செய்து மத்திய அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என அறிவித்துள்ளது.

இந்த இடஒதுக்கீடு செல்லாது என அறிவிக்கக்கோரி சில கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதனை கைவிட வேண்டும். பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு மாநில அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

மேலும், அனைத்து மாநிலங்களிலும் பல சமூகத்திற்கு வாரியம் உள்ளதை போல, தமிழகத்தில் ஆர்ய வைஸ்ய சமூகத்திற்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து தமிழக முதல்வரையும், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் விரைவில் சந்தித்து எங்கள் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கவுள்ளோம் என்றார்.

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா தலைவரின் இம்முயற்சிக்கு வைஸ்ய சமூக மக்கள் அனைவரும் இணைந்து ஆதரவளிப்போம்! ஜெய் வாசவி!!

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Dos and Don’ts in சூரிய கிரகணம் | கோவை திருமதி. விஜய நேதாஜி

சூரிய கிரகணம் வரும் அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாலை 05.11 மணி முதல் 06.27 மணி வரை நிகழவுள்ளது.

சூரிய கிரகணம் ஏற்படும் நாளன்று என்னென்ன செய்யவேண்டும்; என்னென்ன செய்யக்கூடாது (Dos and Don’ts) என்பதை நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group