ஆர்ய வைஸ்யர் சமூகத்தில் ஒரு மைல்கல் – Heroes of Aryavysyas

Heroes of Aryavysyas – ஆர்ய வைஸ்ய வரலாறு புத்தகத்தின் ஆசிரியரும், வைஸ்ய இன ஆராய்ச்சியாளருமான திரு. பாலா வெங்கட்ராமன் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை.

கடந்த பத்து வருடங்களாகவே ஆர்ய வைஸ்யர்களை பற்றி பலவித சுவாராஸ்யமான வரலாற்று தகவல்களை சேகரித்து தருபவர் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன். வாசவி அன்னையின் வரலாற்று தகவல்களை சேகரிக்க ஆரம்பித்த அவரது பணி, இன்று ஆரிய வைஸ்யர் வரலாறுகளையும் நாம் அறிய வைத்துள்ளது.

சிவ பக்தராக என்றும் சிவ சிவ, திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்து கொண்டிருக்கும் இவரது வரலாற்று பதிவுகள் வாசவி அன்னையின் பிறப்பு காலம், வாசவி சமகாலத்தில் வாழ்ந்த மன்னன் மற்றும் அவனது குடும்பங்கள், ஆர்ய வைஸ்யர்கள் ஆதிகாலத்தில் உருவாக்கிய பதினெட்டு பட்டினங்களின் இன்றைய உண்மையான நிலை & பெயர்கள்.

பிரவரான்களின் அடிப்படையில் எந்த கோத்திரத்தார் எந்த கோத்திரத்தாருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஆர்ய வைஸ்யர்களின் குடியேற்றம் என அனைத்து தகவல்களையும் நமக்கு அள்ளி தந்த தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர்.

அவர் ஆர்ய வைஸ்ய சமயப்பணி மட்டும் செய்யவில்லை, சமூகப்பணியும் செய்து வருகிறார்.

ஆர்ய வைஸ்ய சமாஜத்தில் இவருடைய பங்கு

பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் 2020-ம் ஆண்டு தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணியில் மண்டல நிர்வாகியாக அப்போதைய மாநில தலைவர் திரு.அனந்தராம்குமார் அவர்களின் அறிமுகம் மற்றும் வழிகாட்டுதலின்படி இணைந்தார். இந்த சந்திப்பு வேலூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபாவின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்களுக்கு ஆர்ய வைஸ்யர் வரலாறு ஆய்வுக்காக வேர்களுக்கு விழுதுகளின் வணக்கங்கள் விருது வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை தனக்கு நல்கிய அப்போதைய மகாசபாவுடைய மாநில PRO திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், பண்ரூட்டி திரு. முத்துக்குமார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறார்.

மண்டல நிர்வாகியாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என மாவட்டம் முழுவதும் ஆர்ய வைஸ்யர்கள் இருக்கும் கிராம, நகரங்களை தேர்ந்தேடுத்து அங்கே மாவட்ட / நகர நிர்வாகிகளை தேர்வு செய்து இளைஞரணியை அமைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் மாவட்டம் தோறும் அவர் உருவாக்கிய இளைஞரணிகள் தோராயமாக…

தருமபுரி – 10 நகர அணிகள்
கிருஷ்ணகிரி – 28 நகர அணிகள்
திருப்பத்தூர் – 8 நகர அணிகள்
செங்கல்பட்டு – 12 நகர அணிகள்
காஞ்சிபுரம் – 7 நகர அணிகள்
திருவள்ளூர் – 22 நகர அணிகள்.

இது தவிர சென்னையிலும் இளைஞரணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆரிய வைசிய சமாஜ உருவாக்கம்

இளைஞரணியை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், அங்கங்கே ஆர்ய வைஸ்ய நல்ல உள்ளங்களின் உதவி கொண்டு சமாஜங்களை உருவாக்கி/ இணைத்து வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், செங்கல்பட்டு சமாஜங்களையும்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலுசெட்டிசத்திரம், மாங்காடு சமாஜத்தையும்,

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி, திருவூர் சமாஜங்களை உருவாக்கியுள்ளார். திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, ஆரணி (பாலவாக்கம், ஆரணி, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, சூளைமேனி, தண்டலம்), திருவேற்காடு ஆகிய சமாஜங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை மாவட்டத்தில் மயிலாப்பூர் சமாஜத்தை உருவாக்கியுள்ளார், மாம்பலம்/திநகர், அரும்பாக்கம், சூளை/புரசைவாக்கம் சமாஜங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மகிளா விபாக்

பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்கள் முன்னாள் மாநில மகிளா விபாக் தலைவர் திருமதி.பத்மாவதி இராம்தாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தருமபுரி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மாவட்டத்தில் மகிளா விபாக் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 மகிளா விபாக் அணிகள் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மணலி ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் உருவாக முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வேலை வாய்ப்பு

ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணிபுரியும் ஐடி ஊழியரான பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் அவர்கள் ஆர்ய வைஸ்ய ஐடி விங்க் (Arya Vysya IT Wing) எனும் தளத்தை உருவாக்கி, உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைஸ்ய ஐடி பணியாளர்களை அதில் இணைத்து, வேலை தேடும் மற்றும் வேலை மாற்றம் எதிர்நோக்கும் கணினி அறிவியல் படித்த ஆர்ய வைஸ்ய இளைஞர் மற்றும் இளைஞிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறார். கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் மொத்தம் 230 பேருக்கு வேலை வாய்ப்பை தனது IT Wing உதவியுடன் ஏற்படுத்தி தந்துள்ளார்.

ஜாதக மேளா

யூத்விங் ஜாதக மேளா (Youthwing Jathaga Mela) என்ற வாட்ஸ் அப் தளத்தை உருவாக்கி சுய ஜாதக பரிமாற்றம் செய்து கொள்ள உதவுகிறார்.

சுயவிவரங்கள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த பென்னாகரம் திரு.பாலா வெங்கட்ராமன் பரத்வாஜஸ கோத்திரம் பலிசெட்ல குலத்தில், 17 ஏப்ரல் 1986-ல் தருமபுரியில் பிறந்தவர். இவர் தந்தை பலிசெட்ல பென்னாகரம் MVM.சுந்தரம் செட்டியார் மகன் சுங்கா திரு.வெங்கட்ராமன் செட்டியார், தாயார் மிதுனகுலத்தை சேர்ந்த கடத்தூர் திரு.சுந்தரம் செட்டியார் மகள் திருமதி.சியாமளா அம்மாள்.

இளம் வயது பள்ளிகல்வியை பென்னாகரம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படித்த இவர், தனது தமக்கையின் உதவியாலும் பொருளாதார வழிகாட்டுதலாலும் இளகலை படிப்பை தருமபுரியில் முடித்து, தனது MCA படிப்பை சென்னை பல்கலைகழகத்தில் முதல் வகுப்பில் பயின்று முடித்தார்.

தமிழ் மேல் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தமிழ் MA படிப்பை தொலைதூர கல்வியில் முடித்தார், உளவியலில் ஆர்வம் கொண்டுள்ள இவர் MA Psychology பயின்றுவருகிறார்.
அவர் தனது பணி காரணமாக சென்னைக்கு குடிபெயர்ந்தவர்.

2017-ல் பெரம்பலூர் மாவட்டம் நெய்குப்பை மைத்ரகுலத்தை சேர்ந்த திரு.நாகராஜன் செட்டியார் அவர்களின் மகள் கிருத்திகாவை மணமுடித்து தற்போது ஸ்ரீசிவன்யா என்ற அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

சிவ திருப்பணி

சைவ சமயத்தில் பெரும்பற்று கொண்டுள்ள இவர், சிவனடியார்களுடனும், ஆர்ய வைஸ்ய ஆன்மீக அன்பர்களுடனும் இணைந்து அடிக்கடி சிவாலய திருப்பணிகளை செய்து வருகிறார்.

உழவார பணிகளை செய்தல், அன்னதானம், தீப எண்ணை தருதல், கும்பாபிஷேக பணிகளில் உதவுதல் என தன்னால் இயன்ற ஆன்மீக திருப்பணிகளை செய்து வருகிறார். இவரும் இவர் குடும்பமும் இறைவன் திருவருளால் பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

கார்த்திகை தீபமும் சந்திர கிரகமும் | கோவை திருமதி. விஜய நேதாஜி

580 ஆண்டுகளில் மிக நீண்ட சந்திர கிரகணம் வரும் நவம்பர் 19 அன்று நிகழவிருக்கிறது.

இதற்கு முன்பு 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது இத்தகைய நீண்ட சந்திர கிரகணம் நிகழ்ந்து உள்ளது.

மஹா கார்த்திகை தீப தினத்தன்று நிகழும் சந்திர கிரகணத்தை பற்றி நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு இடம் அளித்த தெல்லாகுல ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார்

19 ஆம் நூற்றாண்டில் முதன்முறையாக சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அமைவதற்கு காரணமாக விளங்கியவர் நம் ஆர்ய வைஸ்ய குலத்தை சேர்ந்த ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் ஆவார்.

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு ஸ்ரீ அகுல கொண்டைய செட்டியார் அளித்த இடத்தில் இன்று மடத்தின் முதல் மடாதிபதியான சுவாமி ராமகிருஷ்ணானந்தரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.


இவரைப்பற்றிய மேலும் சுவையான விவரங்களை பண்ருட்டி திரு. சொ. முத்துக்குமார் அவர்கள் கூறக்கேட்போம்:

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பெனுகொண்டா வாசவி அம்மன் சிலை மீது தேடி வந்து அமர்ந்த கிளி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி நதிக்கரையில் பெனுகொண்டா எனும் புனித ஷேத்திரத்தில் அஹிம்சை என்னும் ஆயுதத்தை போதித்து நிலைநாட்டிய நம் ஆர்ய வைஸ்ய குலத்தின் அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் கோவில் உள்ளது.

இன்று (ஜூலை 14, 2021) காலை மரகத வாசவி அம்மனுக்கு பூஜை முடிந்த பின், சிலையின் மீது திடீரென்று எங்கிருந்தோ பறந்து வந்த கிளி அம்மனின் மீது அமர்ந்தது.

மனிதர்கள் பலர் அங்கு இருந்த போதும் அந்த கிளி அச்சம் இன்றி அம்மன் சிலையிலேயே பத்து நிமிடங்கள் தொடர்ந்து அமர்ந்து இருந்தது.

ஜெய் வாசவி!

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா | தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி மண்டலம் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) & செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகிளா விபாக் இணைந்து வழங்கும், மண்டல (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) அளவிலான மாபெரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா.

போட்டி நாள் : 10/09/2021, வெள்ளிக்கிழமை

புகைப்படங்களை பதிவேற்ற கடைசிநாள்: 11/09/2021, சனிக்கிழமை, மாலை 6 மணிவரை.

தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகாசபா இளைஞரணி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மகிளா விபாக் இணைந்து நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மண்டல அளவில் கொண்டாடப்பட உள்ளது.

தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கேற்ப இந்தப் போட்டியானது ஆன்லைனில் நடைபெற இருப்பதால் உங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தியன்று நீங்கள் அலங்கரித்த விநாயகர் அல்லது உங்கள் படைப்பாற்றல் (Creativity) / கற்பனை திறனைக் கொண்டு உருவாக்கிய விநாயகரை புகைப்படம் எடுத்து நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள லிங்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

பதிவேற்றம் செய்ய வேண்டிய புகைப்படங்கள்:விநாயகர் சதுர்த்தி அன்று உங்கள் வீட்டில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் அல்லது

உங்கள் படைப்பாற்றலால் (creativity) நீங்கள் உருவாக்கிய விநாயகர் / புகைப்படம் (Statue or Painting).

மூலிகைப் பொருட்கள், கைவினை பொருட்கள், சமையல் பொருட்கள், அரிசிமாவு, மஞ்சள் என எந்த முறையிலும் விநாயகர் உருவம் செய்திருக்கலாம்.

ஆனால் விநாயகர் உங்கள் சொந்த படைப்பாக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

உங்கள் படைப்பு தொடங்குவதற்கு முன் மூலப்பொருட்கள் வைத்து ஒரு புகைப்படம், படைப்பு முடிந்தவுடன் அந்த படைப்புடன் ஒரு புகைப்படம், நீங்கள் உருவாக்கிய அந்த விநாயகருக்கு/ புகைப்படத்திற்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்யும்படி ஒரு புகைப்படம் என மூன்று புகைப்படங்கள்.

நீங்கள் உருவாக்கும் படைப்பு ஏதோ கருத்தை வலியுறுத்துவதாக அல்லது புராண நிகழ்வுகளை விளக்குவதாக இருந்தால் மதிப்பெண்கள் அதிகம் அளிக்கப்படும்.

குறிப்பு:

இந்தப் போட்டியில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்ட ஆர்ய வைஸ்யர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

10 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11-ந் தேதி மாலை 6மணி வரை மட்டுமே புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய முடியும்.

மண்டல நிர்வாகத்தால் தேர்ந்தேடுக்கப்பட்ட நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து, உங்கள் விவரங்களையும், போட்டிக்கான புகைப்படங்களையும் பதிவிடவும்: https://jaivasavi.vysyaclick.com/

பதிவேற்றம் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் உங்களின் விவரங்களையும், நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பிய புகைப்படங்களையும், கீழே குறிப்பிட்டுள்ள உங்கள் மாவட்ட பிரதிநிதிக்கு அனுப்பலாம். உங்களின் சார்பாக அவர்கள் பதிவேற்றம் செய்வார்கள் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு, இந்தப் போட்டிக்கான மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்.

மண்டல பொறுப்பாளர்கள்:
திரு. பிரவீன் குமார்
செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி தலைவர்
+91 99946 12763

திருமதி. சர்மிளா சேகர்
செங்கல்பட்டு மாவட்ட தலைவர் மகிளா விபாக்
+91 93846 12980

சென்னை மாவட்டம்:
திரு.பாலா வெங்கட்ராமன்,
மண்டல நிர்வாகி,
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்.
+91 97910 90417

செங்கல்பட்டு மாவட்டம் :
திரு. தீபக்
செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி PRO
+91 98948 32633

காஞ்சிபுரம் மாவட்டம்:
திரு.வெங்கடரமணா
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர்,
+91 99522 08734

திருவள்ளூர் மாவட்டம்:
திரு. சதீஷ்குமார்
திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி துணை தலைவர்.
+91 78710 00802

வலைதள வடிவமைப்பு
திரு.இராஜ்குமார்,
கம்பைநல்லூர்.
தருமபுரி மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

World Record Festival by Vasavi Clubs International Dist – V 501A

பல சேவைகளையும், சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வரும் வாசவி கிளப்ஸ், வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி, மிக அதிக நபர் பங்கு கொள்ளும் நிகல்நிலை சாதனை சமையல் நிகழ்வு ஜூம் செயலி வாயிலாக நடத்த உள்ளனர்.

மேலும், அனைத்து சாதனையாளர்களும் இணைந்து வாசவி காயத்ரி மந்திரம் 15 நிமிடங்களுக்கு ஜெபித்து, அதிக நபர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்து ஒரே நாளில் இரண்டாவது சாதனையை புரிய உள்ளனர்.

அமிர்தம் – 2021 உலக சாதனை நிகழ்வை நடத்தும் வாசவி கிளப்ஸ் குழுவினருக்கும், சாதனையில் பங்குபெற இருக்கும் சாதனையாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

குரு பூர்ணிமா, ஆடி மாதத்தில் (சூன் – சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.

இவ்வழிபாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

ஆர்ய வைஸ்யர்களின் குரு பூர்ணிமா

சொல்லப் போனால் ஆர்ய வைஸ்யர்கள் பூர்வ குடிகள் அனைத்தும் குரு பரம்பரை தொட்டு வந்தவை, எனவே அவர்கள் தங்களின் குருக்களை இந்த நாளில் வழிபடுவது இன்றியமையாதது…

நம் ஆர்ய வைஸ்யர்களின் ஒவ்வொரு கோத்திரமும் ஒவ்வொரு ரிஷியிடம் இருந்து வந்தவை, அவர் அந்த கோத்திரர்கள் அனைவருக்கும் பொதுவான குரு ஆவார்.

நாம் கடைபிடிக்கும் ஆச்சாரம் அனுஷ்டானம் அனைத்தும் வீட்டிற்கு வீட்டிற்கு மாறுபடுகிறதே எதனால்!!? அவர்களின் குருக்களின் ஆச்சார அனுஷ்டானங்களை அவர்கள் கடைபிடித்தது.

இவ்வாறு தலைமுறை தலைமுறையாக குருவின் பல செயல்களை சாதித்து வந்த நாம் இடைகாலத்தில் அந்த குரு வணக்கத்தை மறந்து விட்டோம்??

கெந்தசீல கோத்திரம்

உதாரணமாக கெந்தசீல கோத்திரம் எனப்படும் கந்த சீல, கிரந்தசில, கெந்தசீலகுல ஆகிய அனைவரும் கௌதமஸ கோத்திரத்தார் ஆவர். அவர்கள் வணங்க வேண்டிய குரு கௌதம மகரிஷி. இந்த நாளில் குரு கௌதமரின் படத்தை வைத்து வணங்கி, அவர் படம் இல்லை என்றால் அவரை நினைத்து உங்கள் குலதெய்வ படத்திற்கு தூப தீப ஆராதனை செய்து, அவரின் வாழ்க்கை வரலாறுகளை படித்து உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் தலைமுறை குழந்தைகள் ஞானத்தின் பிறப்பிடமாக விளங்கும் எனபது சத்தியம்.

ஏனெனில் கோத்திர குருவின் மூலமாக மட்டுமே மூதாதையர்களுடைய ஆன்மா தெய்வத்திடம் செல்ல முடியும். அவரே அந்த கோத்திர சந்ததியில் பிறந்த அனைவருக்கும் அர்த்த, ஞான, முக்தி மார்க்கத்தை போதிக்கும் / காட்டும் வாழிகாட்டி.

வருகின்ற ஆடி மாத முதல் பௌர்ணமியில் நம் கோத்திர குருவை வணங்கி நன்மை பெறுவோம்.

கிரந்த சில, கெந்தசில, கந்தசில கோத்திரத்தார் வணங்க வேண்டிய ரிஷிகா அகலிகை உடனுறை கௌதம மகரிஷி.
வரத முனி எனப்படும் பலிசெட்ல குலம், பரத்வாஜஸ கோத்திரத்தார் வணங்க வேண்டிய பலிசெட்ல கோத்திரத்தாரின் குரு பரத்வாஜர்
அபிமுஞ்சி குல, அபிமன்யு குல, அபிமஞ்சிகுல ஆகிய யக்ஞவல்கியஸ கோத்திரத்தார் வணங்க வேண்டிய குரு யக்ஞவல்கியர்.
தனகுல, தனந்தகுல, தானுகுல, தனகுண்டகுல ஆகிய வியாசஸ கோத்திரத்தை சேர்ந்த வைசியர்கள் வணங்க வேண்டிய குரு வியாஸர்.
அனந்தகுல கோத்திரத்தார் வணங்க வேண்டிய கலைக்கோட்டு முனிவர் என அழைக்கப்படும் ரிஷ்யஸ்ருங்கர் முனிவர்.
நாபிள்ளகுல, முனகல்ல, மூலகுல ஆகிய குலங்களை சேர்ந்த மௌத்கல்ய மகரிஷி.
படகசீலகுல, பிராணசீலகுல, காமதேனுகுல, பாம்பால குல, ஓரணசீலகுல, பாபால, கமட்டகுல, பாஞ்சால குல, பாவள்ள, பிரக்பால ஆகிய அனைத்தும் குலங்களும் ஒன்றிணைந்தது தான் பாராசரஸ கோத்திரத்தின் குரு பராசர மகரிஷி.
அனுபகுல, அனபாலகுல, அப்பாலகுல ஆகிய குலங்களை சேர்ந்த அகத்தியஸ கோத்திரத்தின் குரு ரிஷிகா லோபமுத்திரா சமேத அகத்திய மகரிஷி.
புனகசில, கோசீல, உத்தமகோசீல, பட்டுகோசீல, பல்லவகோசீல, ஸ்ரீகோசீல, பீமகோசீல, நந்திகோசீல, சத்தியகோசீல, ஸ்ரீபும்சகுல என அனைத்தும் ஒன்றிணைந்த புலஸ்திய கோத்திரத்தின் குரு புலஸ்திய மகரிஷி.
மோர்குல, மோருகுல கோத்திரங்களின் குரு மார்கண்டேய மகரிஷி.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

All about Commemorative Coins [நினைவு நாணயங்கள்] | Explainer Video by Master Anieruth, 5th Standard

தஞ்சாவூரை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் P. Anieruth, Commemorative Coins எனப்படும் நினைவு நாணயங்களை சேகரிப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்.

Commemorative Coins என்றால் என்ன? அவற்றை எவ்வாறு சேகரிப்பது? நினைவு நாணயங்களை பற்றிய பல ருசிகர தகவல்களை நம்முடன் பகிர்கிறார் Young Champ Anieruth.

Master Anieruth, தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபாவின் முன்னாள் செயலாளர் பட்டுகோட்டை திரு. SSB. பிரகாசம் அவர்களின் பேரனும், திரு. P. Praveen Kumar மற்றும் திருமதி. Abisheka அவர்களின் மகனாவார்.

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Online Phonics Workshop – Mrs. Aparna Srinivasan, Certified Phonics Expert

Phonics is a way of teaching children how to read and write. It helps children hear, identify and use different sounds that distinguish one word from another in the English language.

Our Vysdom member and a Certified Expert on Phonics and Montessori Practices Mrs. Aparna Srinivasan of Midhunakula Gotra is conducting a 3 day online workshop on Phonics to parents of children of age between 2.5 to 6 years.

Here are few of the Benefits of Phonics to our Little Kids:

  • Enhances Early Literacy Skills
  • Helps With Speech & Language Development
  • Gives Them A Head Start At School
  • Helps our child in breaking Barriers in Learning

Contents covered in the 3 day workshop:

Click here to get yourself enrolled in this workshop: https://imjo.in/aYhJCp

View the Power of Phonics

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Easy Way to Start Writing

Follow Arpana’s Instagram page to get more cues on Raising a Super Baby: https://www.instagram.com/tales_with_aparna/

You also can contact her at 8754976401

Virtual Workshop on Business Automation for Vysyas | Vasavi Clubs International

வாசவி கிளப்ஸ் இன்டர்நேஷனல் District V501A, V502A மற்றும் V503A இணைந்து வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை “Technology In Business Administration” என்கிற தலைப்பில் தினமும் இரவு 8 மணிக்கு ZOOM App வாயிலாக பல பென்பொருள்களை (Software Apps) பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுத்தர இருக்கின்றனர்.

நவீன டிஜிட்டல் உலகில், பல மென்பொருள்களை கொண்டு தங்கள் தொழில் சார்ந்த வேலைகளை விரைவாக, எளிமையாக செய்யுங்கள். வியாபாரத்தை பெருக்கிடுங்கள்.

Registration Link to Enroll this Workshop: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfeLhMRtFRUyFvDjLo0PRAn92ndRY9OEjTEJTY5XPPX-VE-1A/viewform

For further information, contact Mr. VN. Moorthi – 9840011619

Kannikadhanam.com – Aryavysya Matrimony Website

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group