திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மகாண்யாஸ ருத்ரா பூஜை

கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமையன்று சிவனுக்கு மிக உகுந்த விரதமான சோமவார விரதம் கடைபிடிக்கப்படுகிறது . சந்திர பகவான் சிவனுக்காக கார்த்திகை சோமவாரத்தில் விரதம் கடைபிடித்தமையால், சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி அவரின் தலையிலேயே இடம்பெற்றதாக புராணம் கூறுகிறது. இத்தகைய நன்நாளில், திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், 1008 லிங்கம் மற்றும் பார்வதி அம்மனை வடிவமைத்து, மகாண்யாஸ ருத்ரா பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

நீங்களும் மகாண்யாஸ ருத்ரா பூஜையை கண்டு, சிவன் மற்றும் கௌரம்மாவின் அருளை பெறுவீராக:

இப்பூஜையை சிறப்பாக நடத்திய SKPD திண்டிவனம் கோவில் டிரஸ்ட், வாசவி கிளப் திண்டிவனம் மற்றும் வாசவி கிளப் வனிதா திண்டிவனத்தை சேர்ந்த அனைவருக்கும் உலக ஆர்ய வைஸ்ய பெருமக்கள் மற்றும் Vysdom.in சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய , இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

நம் வைஸ்ய சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் மணமக்களுக்கு, அன்பான அழைப்பு!

Kannikadhanam_Aryavysyas

தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு…….அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!

நம் வைஸ்ய குல மக்களுக்கான இலவச திருமணம் சேலம் மாநகரில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வாசவி கிளப் எலைட் சேலம் சார்பில் நடைபெறபோகிறது. நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி இலவச திருமணம் செய்து​கொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் Vn. திரு. J. சுரேஷ் செட்டியார் – 94425 56711 Vn. திரு. RV. பாலமுரளி செட்டியார் – 95666 84605 அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய , இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Guitar Maestro – Sadanandam | A Gem of Aryavysyas

Sadanandam_Sudarsanam_Aryavysya

நம் வைசிய குல மக்கள் இலக்கியம், வரலாறு, வியாபாரம், உயர்பதவிகள், தனித்திறமைகள் அதிலும் சாதனைகள் இணையற்ற ஒப்பீடு சொல்லமுடியாத அறிவுத்திறன் கொண்டு வாழ்ந்து வருவதை சமீப காலமாக நம்ம குல மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள முடிகின்றது அதற்கு காரணம் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் அருளாசி யால் துவக்க பெற்ற வைசிய சாதனையாளர்கள் குரூப் ஒரு காரணம் என்பதை நம் தெலுங்கு பேசும் நல்லுலகம் ஏற்றுக்கொண்டு ஆதரவளித்து வருகின்றார்கள் அந்த வகையில் இப்போது இசைத்துறையை மட்டும் நான் விட்டுவிடுவேனா.

நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் நம் குலத்திற்கு அளித்திட்ட ஓர் இணையற்ற சாதனையாளர்தான் திரு. சதானந்தம் அவர்கள்.

மூத்த இசையமைப்பாளர்கள் திருவாளர்கள் கோவர்தனம் மற்றும் அவரது அண்ணன் மாஸ்டர் சுதர்சனம் (பராசக்தி படத்திற்கு இசையமைத்தவர்) இசை இல்ல வாரிசு சதானந்தம் ஆவார்.

எளிமையான தோற்றத்திற்கு சொந்தக்காரரான இவர் இசைஞானி இளையராஜாவின் குழுவில் சீனியர் கிடாரிஸ்ட் ஆக கடந்த 40 ஆண்டுகளாக அதாவது இளையராஜாவின் முதல் திரைப்படமான அன்னக்கிளியிலிருந்து இசைத்து வருகிறார்.

நம்மவர் மேலும், பெரும் இசை கலைஞர்களான M.S. விஸ்வநாதன், சலீல் சவுதரி, ஷியாம், தேவராஜன், பாபுராஜ் ஆகியவர்களுடனும் இசைத்து உள்ளார். இவர் விரல்களின் நாட்டியத்தை காதுகளின் வழியே உணர முடியும் சற்று நேரம் கண்களை மூடி திரு. சதானந்தம் அவர்களின் கிட்டார் இசையை உணர்ந்து பார்த்து மகிழ்வோம்.

Enjoy En Eniya Pon Nilave with Ear phones!

வாழ்த்துக்கள் திரு சதானந்தம் சகோதரருக்கு.

ஆர்ய வைசியர் வரலாறு – பிராமணர்களின் சாபம் | பாலா வெங்கட்ராமன்

History of Aryavysya_03

சில ஆரிய வைசியர்களின் பரிகாசத்திற்கும், இழிவுக்கும் ஆளான பிராமணர்கள் நகையாடிய வைசியர்களைச் சபித்தார்கள். நீங்கள் பிரம்மாவின் புகழினால் அகந்தை கொண்டு எங்களை இழிவு படுத்தியதால் நீங்கள் 714 கோத்திரக்காரர்களும் பழிக்கும், பாவத்திற்கும் ஆளாகி, புலால் புசித்து வாழ்ந்து, புகழ் இழந்து அவமானப்பட்டு நிலவுலகம் சென்று வாழ்வீராக, தவிரவும் எங்களை இகழாத ஆரிய வைசியர்கள் ஒரு கன்னியின் பொருட்டு 102 கோத்திரக்காரர்கள் மட்டும் புனித வேள்வித் தீயில் தங்களை அர்பணித்துக் கொண்டு புகழேணியில் ஏறி ஆரிய வைசியர் என பாராட்டப் பெறுவீராக.

இந்த 612 கோத்திரங்களும் வேள்வித்தீயைக் கண்டு அஞ்சி உயிர் காக்க ஓடி பழிக்கப்படுவாராக.

முந்தைய பதிவை படிக்க, இங்கே கிளிக் செய்யவும்

இதுவரை படித்தது புராணப்படி நம் வரலாறு, இனி அறிவியல் படி நமது வரலாறு!

வைசியர்கள் பிரம்மனின் தொடையில் இருந்து தோன்றினார்கள் என்பதற்கு உண்மையான விளக்கம் பிரம்மா என்பது படைப்பாக எடுத்துக்கொண்டால், வைசியனின் படைப்பு வணிகத் தொழில் செய்தல் அவன் நெடுந்தூரம் கடல் கடந்து பல தேசம், பல ஊர்கள் சென்று பொருள் ஈட்ட வேண்டி இருந்தது. அதற்கெற்ப இயற்கையிலேயே வலிமையான கால்கள் அமையப்பெற்றான். வலிமையான கால்களுக்கு ஆதாரமாக பலமான தொடையை அமைக்கப்பட்டு இருந்தான், தொடையினால் அவன் படைப்பாற்றலான வணிகம் நடந்ததால் வைசியன் தொடையில் பிறந்தவன் என்றனர்.

இயற்கை அமைப்பு

இப்போது கூட ஆரிய வைசியர்களின் தொடைகள் சற்று பருத்திருக்கும். காரணம் அவர்கள் தலைமுறை வணிகம் செய்வதால் இயற்கையிலேயே வலிமையான கால்களுக்கு ஆதாரமான பருத்த தொடை கொண்ட இந்த அமைப்பு தலைமுறை ஜீன்களோடு கலந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டது.

தோற்றம் மற்றும் பெயர் காரணம்….

ஆர்ய வைசியர்களை கோமுட்டி என்று பொதுவாக கூறுவர். நாம் அதை கேவலமாக நினைக்கிறோம் ஆனால் அந்த பெயரில்தான் நம் சரித்திரமே புதைந்திருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அது நம் பிறப்பு பெயர்!

அதற்கு முதலில் ஆரிய வைசியர் எனும் சொல்லுக்கு பெயர்காரணத்தை அறிய வேண்டும்.. அறிவோமா!

ஆதியில் வைசியர்கள் அந்தணர்களை போல சைவ ஆகமவிதிப்படி சிவபூசைகள் செய்தார்கள், அவர்களே சிவாலயங்களில் சிவபூசை செய்யும் அந்தணர்களாகவும் விளங்கினர் என்றும் கூறப்படுகிறது. ஆரிய தொழிலான வேத பூஜை செய்து பின் வந்தேறி பார்ப்பன ஆதிக்கத்தால் வாணிபம் செய்ததால் ஆரிய வைசியர்கள் எனப்பட்டனர்.

கோமுட்டி

கோமுட்டி என்ற சொல்லுக்கு பல பெயர் காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது கீழ்கண்ட காரணம் ஆகும்….

கோமுட்டி எனும் சொல் கோமட்டி என்ற சொல்லில் இருந்து தோன்றியதாகும்..

அதாவது கோ + மட்டி என்று பிரித்தால் அதன் பொருள் இன்னும் தெளிவாக விளங்கும். கோ என்றால் கோதவரி நதி என்றும், மட்டி என்றால் நதிக்கரையை அதாவது அந்த நதிக்கரை மண் என தெலுங்கில் பொருள் உண்டு. ஆக கோமட்டி என்றால் கோதவரி நதிக்கரையை சேர்ந்தவர்கள் என்று பொருள்.

உலகின் பெரிய பழமையான நாகரிகங்கள் நதிக்கரையில் தான் தோன்றியது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். நதிக்கரை நாகரீகங்கள் என்றாலே அவை குறைந்தது 2000 ஆண்டுகள் பழமை கொண்டிருக்கும் எனலாம். ஆக கோமுட்டி நாகரிகமும் அதன் பெயரில் இருந்தே கோதவரி நதிக்கரையில் பிறந்த நாகரிகம் என உறுதியாகிறது. இதிலிருந்தே கிட்டதட்ட ஆரிய வைசியர்களுக்கு 2000 ஆண்டுகள் பழமை இருந்திருக்க கூடும் என யூகிக்கலாம் என தெலுங்கு வரலாற்று எழுத்தாளர் திரு. குப்தா கூறியுள்ளார்.

ஆனால் கோமட்டிகள் கோமதீஸ்வரா எனும் ஜைன துறவியின் வழி தோன்றல்கள் என திரு. அனுமந்தராவ் கூறுகிறார்….

கோமுட்டிகளுக்கும் ஜைனர்களுக்கும் என்ன சம்பந்தம்?

ஆரியவைசியர் எதிலிருந்து தோன்றிய பிரிவினர்?

இதற்கான விடை அடுத்த பதிவில்!

திருமதி. விஜயநேதாஜியின் வாசவி கவசம்

Vasavi_Kavasam_Vijaya_Netaji

திருமதி. விஜயநேதாஜி இந்த பெயரை உச்சரிக்கும் போது நமக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவு ஒரு ஒற்றை அலைவரிசையில் நம் மனதில் வந்து மறையும்! இந்த பெயரின் ஆளுமை அப்படி!!!அதைப் போல இவரின் பணியும் வைஸ்ய சேவையும்.

நம் வைஸ்ய குல மக்கள் ஒவ்வொருவரும் குழந்தை பிறந்தது முதல் இறுதி சடங்குகள் வரையில் தெரிந்துகொள்ள வேண்டிய பின் பற்ற வேண்டிய அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து நம் வைஸ்ய குல பண்பாடு கலாச்சாரம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லும் சீரிய பணி செய்து வருகிறார்கள். மேலும் ஆன்மீக விஷயங்கள் பாடல்கள் பதிவேற்றம் செய்து பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ இவர் இயற்றிய வாசவி கவசம். கேளுங்கள் அன்னை வாசவி தேவியின் அருளை பெறுங்கள்.

இவர்கள் ஐ போன்று பலர் நம் வைஸ்ய சமுதாயத்திற்கு தேவை. மேலும் இவர் வைஸ்ய சாதனையாளர்கள் விருது பெற்றவர்கள்.

திருமதி. விஜயநேதாஜி
திருமதி. விஜயநேதாஜி

கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன்

Kanaa_Vysdom_Aryavysya

விரைவில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து வெளியாகும் கனா திரைப்படத்தில் நமது வைஸ்ய குலத்தை சேர்ந்த திரு. முருகன் மாதவன் அவர்களும் சிறு வேடம் ஏற்று நடித்துள்ளார்.

இதற்கு முன்னர் சில படங்களிலும் கெஸ்ட் ரோலில் நடித்து உள்ளார். விரைவில் நம் குல தெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அருளால் முழுநேர திரைப்பட நடிகர் ஆக மின்னுவார்…மின்னவேண்டும்… என்று நாம் அனைவரும் இணைந்து வாழ்த்துவோம்.

Kana_Vysdom_Aryavysya
திரு. முருகன் மாதவன்

இவர் இராமநாதபுரத்தை சேர்ந்தவர். கோத்திரம் – மண்டகுல.

Aryavysya Students out There! Get Ready!!

Maths_Aryavysya_Vysdom
MagicMaths_Vysdom_Aryavysyas
Register Soon and Become Expert in Mathematics

Tree Man – ஆண்டிபட்டி திரு. கோதண்டராஜா

Vysdom_Aryavysya

அறம் காத்த வீரர்களை களம் காத்த வீரர்களை பற்றி நாம் அனைவரும் பக்கம் பக்கமாக படித்து பரிட்சை எழுதி பாஸ் செய்திருப்போம் ஆனால் நிலம் காத்த வீரர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஆம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பாக நாம் இருந்த தெருக்களிலே நம்மைச் சுற்றி இருந்த காட்சிகளை நம்மால் நினைவில் கொண்டு வர முடிந்தால் நிச்சயம் இன்றைக்கு காண்கின்ற நம் தெருக்களின் இன்றைய சூழல் உண்மையிலேயே நம் அனைவரின் கண்களிலும் ரத்தக்கண்ணீரையே வரவழைக்கும் ஆனாலும் எல்லோருமே நம்மால் என்ன செய்ய முடியும் இந்த சூழ்நிலைக்கு நானா காரணம் என்ற சுய பச்சாதாபத்தில் அந்த இடங்களை கடந்து சென்று விடுகின்றோம்.

ஆனால் இந்த வறண்ட சூழ்நிலையை கண்டுவிட்டு காணாமல் செல்ல முடியாத இதயங்கள் உண்டு என்பதை நிரூபிக்கின்ற மனிதர்களும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் அந்த மனிதர் ஒரு வைஸ்ய குலத்தவர் என்றால் நம் குலதெய்வம் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் சும்மா விட்டுவிடுவாரா இதோ இந்த அதிசய மனிதர் வாழ்வது தேனி மாவட்டத்தின் ஆண்டிபட்டியில்.

தொழில் | கோதண்டம் இட்லிகடை

நான்கு சகோதரர்களில் ஒருவர் திரு.கோதண்டராஜா அவர்கள், இவரைப் பற்றி நாம் சற்று விரிவாகக் காணலாம். இவர் கடந்த மூன்றாண்டுகளாக, ஆண்டிபட்டியில் வெகுவேக கட்டிட வளர்ச்சியில் உருமாறி அழிந்த மரங்கள் பற்றின சிந்தனையின்றி கடந்தோடும் நிலையில் எல்லோரும் அவரவர் வேலையை பார்த்துவிட்டு சென்றுகொண்டிருக்க இவர் மட்டும் ஆண்டிப்பட்டி மேல் அக்கறை கொண்டு 1000 மரங்களை நட்டு அதில் ஒன்றுகூட வாடவிடாமல் உரம் வைத்து, டிராக்டரில் வாடகைக்கு தண்ணீர் வாங்கி அவற்றை ஊற்றி தன் சொந்த செலவில் பராமரித்தும் வருகிறார். இன்று, ஆண்டிப்பட்டியில் உழவர்சந்தை, காளியம்மன் கோவில், உரகிடங்கு சாலை என இவர் நட்டு வளர்த்துவரும் மரங்களின் மீது கண்ணிலே படாமல் அருகிப்போன அத்தனை பறவைகளும் கூட்டம் கூட்டமாக ஊரை சுற்றி வலம் வருகின்றன காக்கைகள் புங்கை மரத்தில் கூடுகட்டியுள்ளன.

மரத்தை வாழவைக்கும் திரு. கோதண்டராஜா

இப்படியான சமூக அக்கறை கொண்ட இயற்கையை நேசிக்கின்ற எது நடந்தால் என்ன நான் என்ன செய்யமுடியும் இது என்னுடைய வேலை அல்ல என்று நினைக்காமல் இறைவனின் செல்லப்பிள்ளையாக வாழும் நண்பர்கள் ஒவ்வோர் ஊரிலும் இருந்தால் சுற்றுச்சூழல் பல்கிபெருகவே செய்யும்.

ஆனால் இவர்களைப் போன்றவர்களை இந்த உலகம் மற்றும் நாம் பாராட்ட வேண்டும் மதிப்பளிக்க வேண்டும். நாம் அனைவருமே சம்பாதிக்கத்தான் செய்கின்றோம் நம்முடைய பணம் எத்தனையோ வழிகளில் செலவாகின்றது ஆனால் இதுவரை ஒரு மரத்தையாவது நாம் நட்டுவைத்து இருப்போமா அப்படி இருந்தால் நிச்சயம் நம் வாழ்க்கைக்கு பின்னே நமக்கும் ஓர் சுகவாழ்வு பூஞ்சோலையாக அமையும்.

இவரை வாழ்த்தி உற்சாகப் படுத்துவோம்! இவர் நம் ஆர்ய வைஸ்யர் என்பது கூடுதல் தகவல்!

கட்டாயம் இவரை வாழ்த்துங்கள்!

சமுதாய மாற்றங்கள் செய்ய மிகப் பெரிய செல்வந்தராகவோ பெரிய பட்டம் பெரிய பதவி இதல்லாம் தேவையே இல்லை என்பது இறையருளால் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நாம் தான் அதனை உணராமல் நோட்டுக்களின் பின்னாலேயே… செல்கிறோம்…

திரு. கோதண்டராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பகிர 9976155451

45 ஆண்டுகளாக இசையை கற்றுக்கொடுக்கும் திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன்

Vysdom_Rajalakshmi

கடந்த 45 ஆண்டுகளாக கோவையை சேர்ந்த திருமதி. ராஜலட்சுமி ரவீந்திரன் இசைத்துறையில் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் வைசிய குல மக்களுக்கு பாட்டும் வீணையும் கற்றுத்தந்து இசையை வளர்த்து கொண்டிருக்கிறார்கள்.

Vysdom_Aryavysya

40 வருடங்களுக்கு முன்பாகவே இசையில் வீணை வாசிப்பில் Gold Medalist என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதி, இசையமைத்து, பாடி, வீணை வாசித்து, இப்படி பல்வேறு துறைகளில் திறமை பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் தான் பெற்ற திறமைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார்கள். இன்றும்கூட ராஜஸ்ரீ வாசவி கான சபா என்ற பெயரில் இசை வகுப்புகள் எடுத்து சொல்லிக் கொடுத்து வருகின்றார்கள்.

இவர்கள் வைசிய சாதனையாளர் விருது பெற்றவர் ஆவார்கள் இவர்களைப் போல இன்னும் பல வைசிய திறமையாளர்களை சாதனையாளர்களை நாம் தொடர்ந்து காண்போம் இணைந்து வாழ்த்துவோம் ஜெய் வாசவி!

Editor’s Voice – A New Diwali Thought

Vysdom_Diwali_Wishes

வைசிய சொந்தங்களுக்கு கண்ணணின் அன்பான வணக்கங்கள்!

உலக ஆர்ய வைசியர்கள் ஒன்றுபட்டு இணையும் தளமான இந்த VYSDOM.IN தளத்தில் உங்களுடன் இணைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

மஞ்சள் குங்குமம்

இந்த வார்த்தையை சொல்லும்போதே நமக்குள்ளே ஒருவிதமான பாசிட்டிவ் எனர்ஜி உருவாவதை நம்மால் உணர முடியும் இந்த மஞ்சள் குங்குமத்தின் வார்த்தைக்கு பின்னே எத்தனையோ உணர முடியாத அல்லது நாம் உணர்ந்து கொள்ள முயற்சிக்காத விஷயங்கள் இருப்பதாக உணர்கிறேன் எப்படி தெரியுமா?

நம் முன்னோர்கள் உறவுகளை வளர்ப்பதற்கு பலவிதமான செயல்களை சடங்குகள் சம்பிரதாயங்கள் என்ற வார்த்தைகளுக்கு பின்னே மறைபொருளாக பதிவு செய்து வைத்துள்ளார்கள் அதில் ஒன்றை இந்தப் பதிவில் நாம் காண்போம்.

இன்றும் நம் வைசியகுல மக்களின் இடையே பெரும்பான்மையான மக்களிடத்தில் ஓர் வழக்கம் உள்ளது அது என்னவென்றால் தீபாவளி திருநாளுக்கு நம் உடன்பிறந்த சகோதரிகளுக்கு அதாவது திருமணமாகி கணவன் வீடு சென்றுவிட்ட சகோதரிகளுக்கு தீபாவளிக்கு மஞ்சள் குங்குமத்திற்கு என்று ஏதாவது பணம் அனுப்புவார்கள் அது திருமணமாகி சென்ற நம் சகோதரிகளுக்கு ஒரு மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும்.

ஏனென்றால் தாய் வீட்டிலிருந்து திருமணமாகி பெற்ற தாய் தந்தை கூடப்பிறந்த சகோதர சகோதரிகள் பிறந்த ஊர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கணவனை மட்டுமே நம்பி புகுந்த வீடு செல்லும் நம் சகோதர சகோதரிகள் தலை தீபாவளி என்ற வைபவத்திற்கு பின் பிறந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் வருகின்ற இந்த மஞ்சள் குங்குமம் தொகையை மனதிற்குள் மிகவும் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு எதிர்நோக்கி இருப்பார்கள் தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல ஆனால் நம் தாய் வீட்டிலே நம்மை நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதை அவர்கள் மனதிற்குள்ளேயே எடை போட்டுப் பார்ப்பார்கள்.தாய் தந்தை காலத்திற்குப் பின்னே கூட சகோதரர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் இதில் தவறு இருப்பதாக அர்த்தமில்லை தொகை சிறியதாக இருந்தால் வெளியிலே புலம்புவார்கள் ஆனால் மனதிற்குள்ளே அளவில்லா ஆனந்தத்தை அடைவார்கள்.

இதை ஏன் தெரியுமா நம் முன்னோர்கள் பழக்கி வைத்தார்கள் தாய் தந்தையான நம்முடைய காலத்திற்குப் பின்னே அண்ணன் தங்கை உறவு தொடர்ந்து நிலைக்க வேண்டும் ஒரு பெண்ணுக்கு மஞ்சள் குங்குமத்தை தாய் தந்தை பார்த்து உண்டாக்கி வைத்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டியது சகோதரர்களின் கடமையாகும்!

சகோதரிகளின் குடும்பத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அவர்களின் தாய் வீட்டில் ஏதாவது ஒரு ரியாக்சன் இருக்கும் அது நல்ல விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் துவக்கி வைத்த விஷயம் இன்றைய காலச்சூழலில் ஏதோ ஒரு சில காரணங்களுக்காக சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு இருந்தால்கூட இந்த முறை தீபாவளிக்கு மஞ்சள் குங்குமம் பெயரில் நம்மாலான தொகையை சகோதரிகளுக்கு அனுப்பி வைப்போம் உறவுகளை மலரச் செய்வோம் சகோதரி இல்லாதவர்கள் சகோதரியின் மகளுக்கு செய்யலாம் மருமகளுக்கு செய்யலாம் விட்டுப் போன உறவுகளை தொட்டுப்பார்த்து இணைக்கும் ஒரு நாடி பிடித்துப் பார்க்கும் செயலே இது. கோபத்தில் சகோதரிகள் மறுத்தாலும் நாம் பதில் கோபம் காட்டாது பொறுமை காத்து அனுப்பிடுவோம் அதேபோல என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் தாய் வீட்டிலிருந்து வருகின்ற இந்த மஞ்சள் குங்கும தொகையை சகோதரிகள் ஆகிய நாமும் மறுக்காமல் பெற்றுக்கொள்வோம்.

ஏனென்றால் யாரும் இன்னாரோடு தான் பிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விருப்பப்பட்டு நேயர் விருப்பமாக பிறப்பதில்லை இவையாவும் இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட விஷயங்கள் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தால் போதும் எத்தனையோ மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம் அத்தனையையும் நாம் அனுப்புகின்ற இந்த மஞ்சள் குங்கும தொகை நம் உடன் பிறந்தவர்களுக்கு எத்தனை வயது ஆகி இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்ட வசதி நிலையிலிருந்தாலும் வெளியிலே வெறுப்பது போல் அவர்கள் காட்டிக்கொண்டாலும் அவர்களின் உண்மையான மனது இந்த தொகையை உள்ளூர ரசிக்கும் விரும்பும் இந்த விஷயங்கள் பலவற்றை நாம் ஒவ்வொருவருமே நம் குடும்பங்களில் அல்லது உறவு குடும்பங்களில் நடப்பதை உணர்ந்து இருப்போம் நாம் வலியச் சென்று மஞ்சள் குங்குமம் அனுப்புவதால் நம் சகோதரிகளிடம் நாம் தோற்றுவிட்டதாக அர்த்தமில்லை அவர்கள் அதை வாங்க மறுப்பதால் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தமும் இல்லை இதுபோன்ற உணர்வுபூர்வமான விசயங்களில் நாம் வெளியுலகத்திற்காக போலி கவுரவம் பார்க்காமல் உண்மையாய் உடன் பிறந்தோரின் அடிமனதில் இருக்கும் பாசத்தை உணர்வோம் உறவுகளை பலப்படுத்தவும் விட்டுப்போன உறவுகளை தொட்டுப் பார்த்து இணைத்துக் கொள்ளவும் உதவுகின்ற இந்த செயலை நாம் அனைவரும் நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதோடு அல்லாமல் உதாரணமாக வாழ்ந்து காட்டுவோம் அதுதான் நம் பிள்ளைகளுக்கு இடையே சகோதரத்துவத்தை மலரச் செய்யும் என்று சிந்திப்போம் அதன்படி செயல்படுவோம்.

ஜெய் வாசவி!