ஒருவரின் ஆற்றலையும் ஆளுமையையும் வளர்த்துக்கொள்வதற்கான அடிப்படையாக இருப்பது கல்வி. இன்றைய காலத்தில் கல்வியை கற்பதற்கான வாய்ப்புகள் சரிசமமாக இல்லாததன் பிரதானமான காரணம் பணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் படிக்க விருப்பப்பட்டு, காலச் சக்கரத்தால் கட்டுண்டு கிடப்பவர்களுக்கு கை கொடுத்து வருகிறது ‘Arya Vysya Charitable and Education Foundation’.
சேவை மனப்பான்மை கொண்ட பல வைஸ்ய குல தலைவர்கள் இணைந்து நடத்தும் இந்த உன்னத அமைப்பு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 10000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மேற்ப்படிப்பிற்காக உதவி செய்து வைஸ்ய மாணவர்களின் கனவினை நனவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025-26 கல்வியாண்டிற்கான Scholarship பதிவினை Arya Vysya Charitable and Education Foundation தொடங்கியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளநிலை (UG), முதுநிலை (PG) மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு உதவித்தொகை தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என Arya Vysya Charitable and Education Foundation தலைவர் திரு. ரவிக்குமார் அவர்கள் கூறினார்.
+2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரி விவரங்களை இணையதளத்தில் புதுப்பிக்கவும். உங்கள் கல்விக்கான உதவித்தொகையை உங்கள் கல்லூரியின் பெயரிலேயே காசோலையாகப் பெற்றுக்கொள்ளலாம். எனவே, ஆர்யவைசிய சமுதாய மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாமல் உடனடியாக இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
தமிழ் இலக்கிய உலகில் குற்றவியல் மற்றும் திரில்லர் நாவல்களின் மன்னனாகக் கொண்டாடப்படும் நம் வைஸ்ய சமூகத்தை சேர்ந்த பிரபல பட்டுக்கோட்டை பிரபாகர், தன் பெற்றோரான திரு. வி. ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி. ஆர். சந்திரா ஆகியோரின் நினைவாகச் சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான திரைக்கதை ஆசிரியரான பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் நடத்தவுள்ள இந்தச் சிறுகதைப் போட்டி, புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.
போட்டியின் விவரங்கள்:
• போட்டியில் பங்கேற்பவர்கள் 1000 வார்த்தைகளுக்குள் சிறுகதைகளை எழுத வேண்டும். • எந்த வகை கதையையும் (genre) தேர்வு செய்யலாம். • ஒவ்வொருவரும் இரண்டு வேறுபட்ட கதைகளை அனுப்பலாம். • கதைகளை chandra.radha.pkt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பரிசு விவரங்கள்:
• 🏆 முதல் பரிசு: ₹10,000
🥈 இரண்டாம் பரிசு: ₹5,000
🥉 மூன்றாம் பரிசு: ₹2,000
🏅 ஆறுதல் பரிசு: ₹1,000 (10 பேருக்கு)
வெற்றி பெறும் அனைத்து கதைகளும் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டை பிரபாகரின் இந்த முயற்சியானது, புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதோடு, தமிழ் இலக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எழுத்தாற்றல் கொண்ட அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம்.
இன்று ஆர்ய வைஸ்யர் வரலாற்றில் மகா பிரளயம் – அக்னிபிரவேசம் நடைபெற்ற நாள். சரியாக 1007 வருடத்திற்கு முன்னால் நம் வாசவி அன்னை மட்டுமல்லாமல்!! நமது 102 கோத்திர தம்பதியர் அக்னிபிரவேசம் செய்த நாள் இன்று!
ஒவ்வொரு கோத்திரத்திற்கும் ஒவ்வொரு தம்பதியர் அக்னியில் ஆகுதியாக தன்னை அர்ப்பணித்த நாள் இன்று!
எந்த செல்வத்தை எண்ணி இவர்கள் அக்னிபிரவேசம் செய்தனர். வைஸ்ய குலம் உய்தி பெற வேண்டும் என்று தனது உயிர்களை தியாகம் செய்தனர்.
இவர்களுக்கு வீடு, வாசல், செல்வம், மக்கள், உற்றார், உறவினர் இல்லையா?? அனைத்தும் உண்டு இந்த தம்பதியர் போகத்தில் மிதப்பவர்கள், வீரம், வேள்வி, ஞானம் ஆகியவற்றில் கரை கண்டவர்கள்.
இருப்பவைகள் யாவற்றையும் மக்களுக்கு என தரும் வள்ளல் பெருமகன்கள். வைஸ்ய குலத்தின் தருமத்தை நிலை நாட்ட தனது உயிரை அக்னியில் தந்த தியாக தினம் இன்று.
அவர்கள் பாதையில் நடக்க முடியாவிட்டாலும் அவர்களை இந்த நாளில் நினைத்து பார்ப்போம்.💐🙏🏻
102 கோத்திரத்தில் அக்னிபிரவேசம் செய்த தியாக தெய்வங்களை (தம்பதிகளை) இங்கே காண்போம், அவர்களுடைய ஆசிகளை பெறுவோம்.
கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட மைதானம், இரவு நேரங்களிலும் சிறந்த விளையாட்டு நிலைமைகளை உறுதிப்படுத்தும் அதிநவீன விளக்குகளைக் கொண்டுள்ளது.
“கோல்டன் ஸ்போர்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்” என்று பெயரிடப்பட்ட இந்த டர்ஃப் மைதானம், ஆர்யவைஸ்ய சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணிக்கு சான்றாகும். இந்த திட்டத்தை சாதனை நேரத்தில், வெறும் மூன்று மாதங்களில் நிறைவேற்றிய திரு. ரூபேஷ், திரு. விமல் மற்றும் திரு. முரளி ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு பாராட்டுக்கள். வைஸ்ய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இளைஞர்களிடையே விளையாட்டு திறமைகளை வளர்ப்பதும், சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கிய இலக்காகும்.
மேலும் பல வைஸ்ய இளைஞர்களை ஒன்றிணைத்து ஆர்யவைஸ்ய சமூகத்தின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு பயன்பெறும் பல வியத்தக திட்டங்கள் இவர்கள் வசம் உள்ளது.
இந்த சாதனையுடன் கூடுதலாக, வாசவி கிளப் மில்லினியல்ஸ் கோவை, வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்த மைதானத்தில் மாவட்ட அளவிலான டர்ஃப் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (ஜனவரி 13 ஆம் தேதி), போகிப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாக கருதப்படும் போகி நன்னாளில், நம் அனைவரின் வீட்டு வாசலில் காப்பை காட்டுவோம். இந்த சடங்கிற்கு பின் உள்ள ஆன்மீகத்தையும், அறிவியலையும் பற்றி நம் வைஸ்ய ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் எளிமையாக விளக்கியுள்ளதை கேளுங்கள்! ஞானம் பெறுங்கள்!!
தானத்தில் உயர்ந்தது அன்னதானம்! இதற்கு இணையான இன்னொரு தானமுண்டு!! அது என்ன தெரியுமா? அதுதான் கன்னிகாதானம்!
நம் வைஸ்ய குல மக்களுக்காக 45வது Samuhika Vivaham (இலவச திருமணம்) சென்னை மாநகரிலுள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் The Southern India Vysya Association சார்பில் நடைபெற இருக்கிறது.
நம் வைஸ்ய குல சாஸ்திர சம்பிரதாயப்படி நிச்சியதார்தம், உபநயனம் மற்றும் மாங்கல்ய தாரணம் ஆகிய சடங்குகளுடன் இலவச திருமணத்தை செய்துகொள்ள விரும்பும் வைஸ்ய மணமக்கள் விரைவாக முன்பதிவு செய்யுங்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் பெருமாள் கோயிலில் உள்ள தூணில் 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டை சரித்திர ஆய்வாளர்களும் கல்வெட்டு நிபுணர்களுமாகிய திருவண்ணாமலை பாலமுருகன் மற்றும் அரியூர் பழனிச்சாமி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தூணில் ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் உருவமும் உள்ளது. அந்த உருவங்களின் மேல் துந்துபி வருடம், ஐப்பசி மாதம் கோமட்டி தாண்டவ செட்டி குமாரன் பெத்தப்பு செட்டி மண்டபம் கட்டியமை என கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் தாங்கள் சிறுபான்மையராக இருந்தாலும் கூட பொதுகாரியங்களுக்கு தானம் செய்வதை தங்கள் கடமையாக ஆர்ய வைஸ்யர்கள் கொண்டிருந்ததை அறியும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
மேலும் கடலாடியில் சிறப்பாக அமைந்துவரும் வாசவி ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுமார் 10 கி. மீ. தொலைவில் இந்த மண்டபம் அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
கடலாடி பிரபாகர் அண்ணாவை தொடர்பு கொண்டுள்ளேன். மேலும் விவரங்கள் விரைவில்.
மேலும், விழப்புரம் கைலாசநாதர் கோயிலில் 15ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் கோமிட்டி செட்டிகள் செய்த உற்சவத்தை பற்றிய குறிப்பு உள்ளது. இன்றும் அந்த உற்சவத்தை நம் சமூகத்தார் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
நாம் சென்ற பகுதியில் மஞ்சளினால் கௌரியை செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்களை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்கினார்.
நம் வைஸ்ய குல Artpreneur – ஹரிஷ்மிதா ரமேஷ் அவர்கள், மஞ்சளினால் கௌரியை செய்யும் வழிமுறைகளை மிக விளக்கமாகவும், எளிமையாகவும்; VYSDOM வைஸ்ய குடும்பத்தினருக்கு இப்பதிவின் வாயிலாக கற்றுக்கொடுக்கவிருக்கிறார்.
[பாகம் – 1] கௌரி செய்ய தொடங்கும்போது நாம் செய்ய வேண்டியவை, நெற்றி பகுதி, மூக்கு புருவம் செய்வதற்கான ஸ்மார்ட் டிப்ஸ்!
நம் அடுத்த பதிவில் கௌரியின் கண், காது, உதடு, கண்ணம், மற்றும் முழுமையாக செய்வதற்கான வழிமுறைகளை ஹரிஷ்மிதா அவர்கள் விளக்குவார்.