வரன் தேடலில் நம்முள் எழும் கேள்விகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கும் விதமாக மூன்றாம் ஆண்டினை கொண்டாடும் ஆர்ய வைஸ்ய மேட்ரிமோனி இணையதளம் – கன்னிகாதனம்.காம் Digital Matrimony Conference என்கிற கருத்தரங்கு மே மாதம் 3 ஆம் தேதி 2020, ஞாயிற்றுகிழமையன்று காலை 11 மணி முதல் நடைபெற்றது.
Click below and Download to get the Recording of Kannikadhanam’s First Digital Matrimony Conference (Dr. Bathri Narayanan contact details is provided in the sixth page):
கருத்தரங்கில் திரு. T. கண்ணன், Founder & Chairman – வாசவி மித்ரா மஹால் அவர்கள் தலைமை ஏற்று ICE Breaker எனும் கன்னிகாதானத்தின் புதிய சேவையை துவக்கி வைத்தார்.
வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும் வகிக்கும் பங்கினை பற்றி விளக்கி, ஜோதிடத்தை பற்றி நம்முள் எழுந்த கேள்விகளுக்கு ஆர்ய வைஸ்ய ஜோதிட திலகம் Dr. பத்ரி நாராயணன் P.hD., in Astrology அவர்கள் விடையளித்தார்.
வரன் தேடலில் நம்முள் எழும் கேள்விகளுக்கான தீர்வை நோக்கி பயணிக்கும் விதமாக மூன்றாம் ஆண்டினை கொண்டாடும் ஆர்ய வைஸ்ய மேட்ரிமோனி இணையதளம் – கன்னிகாதனம்.காம் Digital Matrimony Conference என்கிற கருத்தரங்கை வரும் மே மாதம் 3 ஆம் தேதி, ஞாயிற்றுகிழமையன்று காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது.
“வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும் வகிக்கும் பங்கு என்ன” என்கிற தலைப்பில் முதல் கருதரங்கம் நடைபெற உள்ளது. திரு. T. கண்ணன், Founder & Chairman – வாசவி மித்ரா மஹால் அவர்கள் இக்கருத்தரங்கிற்கு தலைமை ஏற்க, ஆர்ய வைஸ்ய ஜோதிட திலகம் பட்டத்தை வாங்கிய Dr. பத்ரி நாராயணன் P.hD., in Astrology அவர்கள் வரன் தேடலில் ஜாதகமும், ஜோதிடமும் வகிக்கும் பங்கினை பற்றி விளக்க உள்ளார். மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்பவர்கள் கேட்கும் ஜோதிட சம்பத்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவும் உள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திவ்யப்ரபந்தத்தை, நம் VYSDOM குடும்பத்தை சேர்ந்த சேலம் திருமதி. ஜீவரேகா அவர்களின் மெய்மறக்கும் இனிய குரலில் கேளுங்கள்.
Start your day positively, devotionally!
This “CLASSICAL RAGA” a WhatsApp group created by Mrs. Jeeva Rekha. If you would like to learn Classical music through online, then Join soon using the link: Click Here
VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine April மாத இதழ் வெளியிடப்பட்டுள்ளது.
1939ஆம் ஆண்டு ஒரு மாலைப்பொழுது ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டில ஒரு இளைஞன் கதராடை அணிந்து கொண்டு ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தான். அப்பொழுது சரக் சரக் என பூட்ஸ் கால்கள் எழுப்பும் சத்தத்துடன் திபுதிபுவென நுழைந்த நிஜாம் அரசைச் சார்ந்த ஆங்கில போலீஸ்காரர்கள் அந்த இளைஞனை சுற்றி வளைத்தனர். அந்த இளைஞன் கண்களில் அப்பொழுது கூட பயம் தென்படவில்லை, அதற்கு மாறாக எதற்காக என்னை கைது செய்கிறீர்கள் என்று ஒன்றுமே தெரியாத அப்பாவியைப்போல் கேட்டான் அந்த இளைஞன்.
உடனே அந்த இளைஞனின் முதுகில் ஒரு அடி அடித்துவிட்டு,போலீஸ் ஸ்டேஷனுக்கு வா, அங்கு உனக்கு விளக்கமாக பதில் சொல்கிறோம் என்று ஏளனமாக சொன்னார் ஒரு போலீஸ்காரர்.
இதை கேட்டதும் அவன் சற்றும் கவலை கொள்ளவில்லை, மாறாக என்னுடைய பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன், இதோ அதை முடித்துவிட்டு நானே போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்றான்.
என்ன எழுதிவிட்டு வருகிறாயா? நீ இனிமேல் கட்டுரையே எழுதக் கூடாது என்பதற்காகத்தான் உன்னை கைது செய்கிறோம், நட..ஸ்டேஷனுக்கு என்று சொல்லி அந்த இளைஞனைத் தரதரவென இழுத்துச்சென்றனர்.
ஸ்டேஷனில் ஆங்கில உயர் அதிகாரி முன் நிறுத்தப்பட்டான் அந்த இளைஞன். ஒரு தெலுங்குப் பத்திரிக்கையை அவன் முன்னால் தூக்கிப் போட்ட அந்த அதிகாரி அந்த தெலுங்குப் பத்திரிக்கையின் பெயர் கிரந்தமாலா (விலை ஒரு அணா) என்று எழுதியிருந்தது. அதை பார்த்ததும் அந்த இளைஞன் முகத்தில் சட்டென்று புன்னகை தோன்றி மறைந்தது. இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் நீ தானா என அந்த அதிகாரி கேட்டார். ஆம், என்று பெருமிதத்தோடு சொன்னான் அந்த இளைஞன். அந்த அதிகாரியின் குரலில் உடனே உஷ்ணம் ஏறியது. உனக்கு இருபது வயது கூட ஆகவில்லை அதற்குள் ஆங்கில அரசை எதிர்த்து நாச வேலை செய்த தீவிரவாதியான அல்லூரி சீதாராம ராஜூவை பற்றி புகழ்ந்து அதுவும் உருது மொழியில் இந்த தெலுங்கு பத்ரிக்கையில் எழுதி இருக்கிறாய் உனக்கு என்ன தைரியம்? என்று சீறினார் அந்த அதிகாரி.
மீண்டும் புன்னகைத்தான் அந்த இளைஞன். ஐயா இந்த சீதாராம ராஜு தீவிரவாதி அல்ல. உண்மையை உரக்கச் சொன்ன தேசபக்தன், சிறந்த போராட்ட வீரன், உங்கள் அராஜகப் போக்கை தட்டிக்கேட்ட உத்தமன், அவரைப் போய் தீவிரவாதி என்கிறீர்களே, அதனால் தான் உண்மை நிலையை மக்கள் அறிய வேண்டும் என்பதற்கும், அவர் செய்த வீர சாகசத்தை என் நாட்டில் உள்ள அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகத்தான் அவரின் வரலாற்றை உருது மொழியில் எழுதி இருக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள் இதை தெலுங்கிலும் எழுத உள்ளேன் என்றான் கேலியாக. இதைக் கேட்டதும் ஏற்கனவே சிவந்திருந்த அந்த அதிகாரியின் முகம் மேலும் சிவந்தது.
அப்போது ஒரு அதிகாரி குறுக்கிட்டு சார், இதுமட்டுமல்ல இவன் யாருக்கும் தெரியாத பல சுதந்திர போராட்ட வீரர்களின் சாகசங்களை எப்படியோ தேடி கண்டுபிடித்து எழுதி ஆந்திர மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறான் என்று நம் ரகசிய போலீசார் மூலம் துப்பு கிடைத்திருக்கிறது என்றார்.
அவ்வளவுதான் எரிகிற தீயில் எண்ணெயாக இதைக் கேட்டதும் அந்த ஆங்கில அதிகாரியின் முகம் மேலும் ரத்த சிவப்பாக மாறியது. தன் கையிலிருந்த கிரந்த மாலா பத்திரிகையை கிழித்து அந்த இளைஞன் முகத்தில் விசிறி அடித்த அவர், இவனை கைது செய்து சிறையில் அடையுங்கள் இவன் இனிமேல் எந்த மொழியிலும் எழுதக்கூடாது என்று ஆங்கிலத்தில் கத்தினார்.
போலீஸ்காரர்கள் உடனே அந்த இளைஞனை தரதரவென இழுத்துச்சென்று சிறையில் தள்ளி பூட்ஸ் காலால் உதைத்து பின் சிறையை பூட்டிவிட்டு சென்றனர்.
எதற்கும் கவலைப்படாமல் தன் உதட்டில் தவழ்ந்த ரத்தத்தை துடைத்துவிட்டு, அடுத்து எந்த தேச பக்தரின் கதையை எழுதுவது, தூங்கி கிடக்கும் நம் மக்களின் சுதந்திர வேட்கையை எப்படி தட்டி எழுப்புவது என்று சிந்தித்தபடி அந்த சிறைச்சாலையையே போதிமரம் ஆக்கினான் அந்த இளைஞன்.
அந்த 20 வயது இளைஞனின் பெயரை அறிய நீங்கள் ஆவலாக உள்ளீர்கள் அல்லவா ?
அவர் தான் ஸ்ரீ வைஸ்ய பந்து என்று பின்னர் பாராட்டப்பட்டவரும், பிற்காலத்தில் புகழ்வாய்ந்த வாசவி கிளப்பை தோற்றுவித்த கல்வகுண்டல சந்திரசேன குப்தா (கே.சி குப்தா) என்றால் உங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியோடு ஒரு பெருமிதம் தோன்றுகிறதல்லவா? ஆம், அகில இந்திய அளவில் ஏன் அகில உலகளவில் வைஸ்யர்களை ஒன்றிணைக்க பாடுபட்ட இவரின் வாழ்க்கை சரித்திரம் அனைவராலும் அறியப்பட வேண்டிய உன்னத சரித்திரம் ஆகும்!
அப்பப்பா எவ்வளவு போராட்டங்கள், எத்தனை சோதனைகள் அத்தனையையும் சந்தித்து வெற்றிபெற்ற அவரின் வாழ்க்கை வரலாற்றை இனி பார்ப்போமா?
Painting Brush என்றாலே எளிதில் நம் நினைவிற்கு வருவது ஓவியங்கள். நாம் அறிந்த ஓவியங்கள் பலவும் Painting Brush ஐ கொண்டு வரையப்படுவதனால் அவ்வாறு தோன்றுவது சகஜமே.
சரி, Painting Brush ற்கு பதிலாக கத்தியினை கொண்டு வரையும் ஓவியங்களை பற்றி அறிந்துள்ளீர்களா? கோவை Krish’s Clay Creations – Ms. Harishsmitha Ramesh அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக கத்தியினை கொண்டு ஒரு அழகிய ஓவியத்தை வரைய கற்றுக்கொடுப்பதை காணுங்கள்:
கொரோனா – உலகத்தையே அச்சுறுத்தி வரும் வார்த்தை. சோதனை வரும் வேளையில், அதனை கண்டு பயந்து ஓடாமல் அந்த சோதனைக்கான தீர்வை ஆராய்ந்து வெற்றி காண்பதே சாதனை.
சரி, இப்பொழுது கொரோனா வந்துவிட்டது, அதனை எப்படி அழிப்பது? நம் அனைவரின் கடமைகள் என்னென்ன? என்பதனை ஆன்மிகத்துடன் ஒப்பிட்டு பல சுவாரசிய கதைகளுடன் எளிமையாக விளக்குகிறார் நம் வைஸ்ய குலத்தின் சின்னத்திரை Celebrity வீராணம் திரு. சபரி அவர்கள்.
Prevention is better than cure என்கிற ஆங்கில பழமொழி மிகச் சரியாக பொருந்தும் காலம் இது.
கொரோனாவை இந்த உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதையே இந்த யுகாதியின் சங்கல்பமாக ஏற்போம். இதற்காக நாம் ஒவ்வொருவரும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்:
சமூகத்துடன் இடைவெளி விட்டு இருப்பது (Social Distancing) – உங்களுக்கும், அடுத்த நபருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் (அதாவது சுமார் 3 அடி) தூரம் இருக்க வேண்டும்.
கைகளை அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசிகளால் தூய்மை படுத்த வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில் நம் வைஸ்ய குல ஆன்மீக குரு திருமதி. விஜய நேதாஜி அவர்கள் கொரோனாவை வீழ்ப்பதற்காக கூறும் பாசிட்டிவான அறிவுரைகளை கேளுங்கள்:
பெங்களுருவில் மருத்துவத்தை பயின்று வரும் வைஸ்ய குல மருத்துவ கல்லூரி மாணவி லக்ஷ்மி ப்ரியா வெங்கடராமன் அவர்கள் கொரோனாவை வீழ்த்த கூறும் ஆலோசனையை கேளுங்கள்:
Enhance your immune system by these potent Ayurvedic remedies:
Triphala Kashaya
Get Triphala – available as powder in ayurvedic medical shop
Boil it with water for preparing kashaya
Mix Triphala with water in 1:8 ratio
Then, reduce the quantity to 1/4th
Kashaya is now ready for gargling
Guduchi Kashaya
Guduchi (tinospora cordifolia) Kashaya, this is available in all Ayurvedic medical shops for oral intake (have 15-20ml)
ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் சார்பில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று, சேலம் டவுன் வாசவி மஹாலில் நம் வைஸ்ய குல சமுதாய மக்களின் நலனிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது.
தெலுங்கு யுகாதி மாநாட்டின் கோரிக்கைகள்:
நமது மாணவ சமுதாயத்திற்காக கல்வியில் இட ஒதுக்கீடு
வேலை வாய்ப்புகளில் நமது சமூகத்திற்கு இட ஒதுக்கீடு
மேலும் நம் சமுதாயத்திற்காக பல கோரிக்கைகள்
மாநாட்டிற்கான அழைப்பிதழ்:
தெலுங்கு யுகாதி மாநாடு – நமது வைஸ்ய சமூக கோரிக்கைகளை வலியுறுத்தும் மாநாடாகவும், நம் ஒற்றுமையை தமிழகத்தில் பறைசாற்றும் மாநாடாகவும் அமையும் என்று ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவையின் தலைவர் நாகா R. அரவிந்தன் அவர்கள் கூறுகிறார். மேலும், இம்மாநாட்டில் வைஸ்ய குல மக்களையும், இளைஞர்களையும் குடும்பத்துடன் கலந்து கொண்டு நம் சமுதாயத்தை வலுப்பெறச்செய்ய அன்புடன் அழைக்கிறார்.
ஆண்டிபட்டியிலிருந்து இந்திய அகாடெமியில் தேர்ச்சிபெற்ற தமிழ்நாட்டின் ஒரே பெண் அதிகாரி நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த அன்னபூரணி அவர்கள் ஆவார். நம் அன்னபூரணி அவர்களை பற்றி திரு. சைலேந்திர பாபு IPS அவர்கள் போட்ட Inspiring ட்வீட் இதோ:
அன்னபூரணி. இன்று ராணுவ அகாடமியில் தேர்சிபெற்ற ஒரே தமிழ்நாட்டு பெண் அதிகாரி.ஆண்டிபட்டி நம்பிக்கை நட்சத்திரம். எதுவும் சாத்தியமாகும். Annaporani from Andipatty is the only lady officer from TN to pas out from OTA. She is the hope of many young women. Anything is possible. pic.twitter.com/xM8gKNzeP5
Simplicity என்கிற இணையப்பத்திரிகையில், Lt.S.Esan (அன்னபூரணி அவர்களின் Mentor) கூறியது:
Ms. Annapoorni is joining the rank and file of the Indian Army, the world’s second toughest army and passing out from Officers Training Academy (OTA) after her rigorous training period.
“The Officers Training Academy used to witness the passing out parade of only our boys. We always have to crib about the fact that there is not a single lady officer from Tamilnadu. But this time it is different” said Training Commander Lt.S.Esan.
வாழ்த்துக்கள் அன்னபூரணி! VYSDOM குடும்பத்தினர் சார்பாக, தங்களுக்கு எங்கள் Royal Salute.