சுண்டக்கானா சும்மாவா | Know Your Food, Know Your Health

சுண்டைக்காய் உருவத்தில் மிகச்சிறியது, எனினும் அதனை உண்பதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் மிகப்பெரியது.

பல்வேறு மருத்துவக் குணங்களை கொண்ட சுண்டைக்காயின் மகத்துவத்தையும், அதனை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றியும் நம் வைஸ்ய குலத்தை சேர்ந்த திருமதி. அபிராமி கோபிநாத் அவர்கள் நம் VYSDOM குடும்பத்தினருக்காக Know Your Food, Know Your Health என்ற பகுதியின் வாயிலாக கூறுவதை கேளுங்கள்.

Know Your Food, Know Your Health from ABIs Home Made.

Click to Listen:

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பொள்ளாச்சியில் ஸ்ரீரங்கம் | ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவில் சொர்க்க வாசலின் நுழைவாயிலை போலவே, வைகுண்ட ஏகாதசி விழாவிற்காக நமது பொள்ளாச்சி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பிரம்மாண்ட நுழைவாயிலினை அமைத்து, ஸ்ரீ ரங்கநாத பெருமாளை சயன திவ்ய திருக்கோலத்தில் திவ்ய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர் நம் பொள்ளாச்சி வாழ் ஆர்ய வைஸ்ய பெருமக்கள்.

சொர்க்க வாசல் ஜனவரி 6 ஆம் தேதி, திங்கள் கிழமையன்று அதிகாலை 4:45 மணி முதல் நாள் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படும்.

மேலும், திருமதி. இந்திரா ஜெயசந்திரன் குழுவினரின் சம்பூர்ண நாராயணீயம் பாராயணம் காலை 7:00 மணிமுதல் தொடர்ந்து மாலை 6:00 மணிவரை நடக்க இருக்கிறது.

திருமாலின் இருப்பிடத்தில் இருக்கும் வைகுண்ட கதவுகள் திறக்கப்படும் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளில், தங்கள் குடும்பத்தினருடன் ஆலயத்திற்கு சென்று ஸ்ரீ ரங்கநாதரின் அருளை பெறுங்கள்.

பொள்ளாச்சி ஆர்ய வைஸ்ய பெருமக்களுக்கும், விழா குழுவினருக்கும் VYSDOM.in குடும்பத்தினரின் வாழ்த்துக்கள்!

தகவலுக்கு நன்றி – திரு. பிரபு, பொள்ளாச்சி

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

ஆன்மீக சுற்றுலா – யாழ் முறிந்த (மறைந்த) கதை | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

மார்கழி மாதம் சென்னையில் இசைக்கச்சேரிகளின் இனிமை எங்கும் பரவியிருக்கும். இசைப்பிரியர்களுக்கு சரியான வேட்டைதான். இந்த சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக கோலோச்சிய யாழ் இசைக்கருவியின் பயன்பாடு மெல்லமெல்ல குறைந்து பிறகு மறைந்தே போனதைப் பற்றிய ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

யாழ் இசைக்கருவியில் பல வகை உண்டாம்! வில் யாழ், பேரி யாழ், மகர யாழ்…. (இது மட்டுமல்லாமல் 1000 நரம்புகளைக்கொண்ட ஆதி யாழ் இருந்ததாம். இதைக்கொண்டு பயங்கரமான காட்டு விலங்குகளையும், ராட்சர்களையும் விரட்டுவதற்கு பயன்படுத்தினார்களாம். இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்).

பொதுவாக இசைக்கருவிகளை வாசித்து பாடுபவர்களுக்கு பாணர் என்று பெயர்.

விருதாசலத்திற்கு அருகில் உள்ள திருவெருக்கத்தம்புலியூரில் (இந்த ஊரின் தற்போதைய பெயர் ராஜேந்திரன் பட்டினம் இந்த பெயர் மாற்றத்திற்கு பின் ஒரு சுவையான கதை உண்டு அதை பிறகு பார்க்கலாம்) பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். இவர் மனைவியின் பெயர் மதங்கசூளாமணி. இருவரும் யாழ் வாசிப்பதில் விற்பன்னர்கள்.

ஒரு முறை மதுரைக்குச் சென்று சொக்கநாதனை வணங்க கோயிலின் வாசலில் நின்று பாட மக்கள் அனைவரும் இவர்களின் இசையில் மயங்கிய இவர்களை சூழ்ந்து நின்று ரசித்தனராம். அக்காலத்தில் பாணர்களுக்கு கோயிலின் உள்ளே சென்று பாடுவதற்கு உரிமையில்லை. ஆனால் சொக்கநாதரே அசிரீரியாக இருவரையும் சன்னதிக்கு அழைத்துவந்து பொற்பலகையிட்டு அமரச் செய்து பாட அர்ச்சகர்களுக்கு அறிவுறுத்தினாராம். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய யாழ்பாணரின் பெருமையை அனைவரும் அறிந்து வியந்தனராம்.

அதுபோல் திருவாரூரிலும் இறைவன் இவருக்கு அருள்புரிந்தானாம். (இறைவன்தான் இசைக்கு மயங்குபவன் ஆயிற்றே)

சீர்காழியில் ஞானசம்பந்தரை இவர்கள் சந்திக்க தன்னோடு பயணித்து தன் பாடலுக்கு இசையமைக்க முடியுமா? என அவர் கேட்க, தான் கடவுளாக மதிக்கும் சம்பந்தரோடு பயணிக்க பாணருக்கு கசக்குமா என்ன? பெரும் மகிழ்ச்சியோடு அவரோடு பயணித்தாராம் யாழ்பாணர்.

திருநள்ளாறு தர்ப்பணேஸ்வரர் ஆலயம் சென்று பாடிய பிறகு யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரை அணுகி தன்னுடைய தாய் பிறந்த தருமபுரம் எனும் ஊர் மிக அருகில் உள்ளதாகவும் அங்கே சென்று தன் பாட்டனாரை சந்திக்க அனுமதி கோரியதாகவும் ஆனால் இதைக்கேட்ட திருஞானசம்பந்தர் தானும் அங்கு வருவதாக கூறினாராம்.

நெகிழ்ந்து போன யாழ்ப்பாணர் பாட்டனார் வசித்துவந்த தருமபுரத்திற்கு ஞானசம்பந்தரையும் அழைத்துச்சென்றாராம்.

அப்பொழுது அங்கு ஒரு எதிர்பாராத நிகழ்வு நடந்தது. ஞானசம்பந்தரின் பாடல்கள் பிரபலமடைய பாணரின் இசைதான் காரணம் என உறவினர்கள் பேசுவதைக் கேட்டவர் அதிர்ந்து போனாராம். கண்களில் நீர் சொறிய இறைவனின் அருள்பெற்ற ஞானசம்பந்தர் எங்கே நான் எங்கே, நான் இசையமைப்பதற்காகவே எளிமையாக தன் குருநாதர் பாடுவதாகவும், அவர் நினைத்தால் யாராலும் யாழில் இசையமைக்க முடியாத வகையில் பாடல் பாட முடியும் என்றும் அனைவருக்கும் கேட்கும் வண்ணம் உரக்க கூறினாராம்.

பாணரின் வற்புறுத்தலால் ஞானசம்பந்தரும் “மாதர் மடப்பிடி” எனும் பதிகத்தை கமகத்தோடு பாட (இதற்கு யாழ் முறிப்பதிகம் என்று பெயர்) அந்த பதிகத்தை இசைக்க முடியாமல் பாணர் வாசிப்பதை நிறுத்தி பார்த்தீர்களா? இந்த மகானால் தான் நான் பெருமையடைந்தேன் என்று கூறி கமகம் வாசிக்க இயலாத யாழ் இசைக்கருவியை முறிக்க முற்பட்டாராம். பெருந்தன்மையுடன் ஞானசம்பந்தர் அதை தடுத்தாராம்.

இதற்கு பின்தான் யாழ் இசைக்கருவியின் பயன்பாடு குறைந்து மீண்டும் வீணையின் பயன்பாடு அதிகரித்தது என்று கூறுகிறார்கள்.

சரி, இனி திருநள்ளாறுக்கு செல்லும் அன்பர்கள் இனிமேல் தவறால் அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தருமபுரம் (மாயவரத்திற்கு அருகில் உள்ள தருமபுரம் அல்ல) யாழ்முறிநாதரையும் தவறாமல் தரிசியுங்கள்.
அப்படியே தன் குருநாதரின் மீது அன்பு வைத்து மிகப்பெரிய விற்பனராக திகழ்ந்தாலும், இறைவனே இவர் இசைக்கு மயங்கி அருள்புரிந்திருந்தாலும், தன் குரு பக்தியாலும், தன்னடக்கத்தாலும் நாயன்மார்களில் ஒருவராக உயர்ந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும் வணங்கி மகிழுங்கள்.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் காண கிடைக்காத புகைப்படம் | ஹரி கிருஷ்ணா, திண்டுக்கல்

இயற்கையின் ஒவ்வொரு அசைவும் நம்மை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்திக்கொண்டே இருக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரே நேர்கோட்டில் நிலவு வருவதால், பூமியில் விழும் சூரிய ஒளி தடுக்கப்பட்டு, நிலவின் நிழல் பூமியின் மேல் விழுகிறது. இதுவே சூரிய கிரகணம் ஆகும்.

நெருப்பு வளைய சூரியனுடன் இன்று முழுவதும் பயணித்து, நம்முடன் புகைப்படமாக பகிர்ந்துள்ளார் வைஸ்ய குலத்தை சேர்ந்த Budding Photographer ஹரி கிருஷ்ணா from திண்டுக்கல்.

🌐 VYSDOM for Aryavysyas செய்திகளின் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: http://bit.ly/2G0J4rg

ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine | Dec ’19

VYSDOM.in (a Digital Magazine for Aryavysyas) மற்றும் Kannikadhanam (Free Aryavysya Matrimony Website) இணைந்து ஆர்ய வைஸ்யர்களுக்கான eMagazine (டிசம்பர் இதழ்) வெளியிடப்பட்டுள்ளது.

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Want to post your article on Vysdom? Click here and get in touch with Vysdom team!

வைஸ்யர்களுக்கான மார்கழி மகோற்சவம் கோவையில்

மார்கழி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதிகாலை குளிர், வீடுகளின் முன் இடும் வண்ணக் கோலங்கள், கோவில்களில் வழிபாடுகள் மற்றும் குறிப்பாக மார்கழி மகோற்சவம்.

உலக ஆர்ய வைஸ்ய மகா சபா தமிழ்நாடு விபாக், சௌத் தமிழ்நாடு மகிளா விபாக் மற்றும் SKPD கோவை இணைந்து வரும் 17 டிசம்பர் 2019 முதல் 14 ஜனவரி 2020 வரை தினமும் மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை உலக ஆர்ய வைஸ்யர்களுக்கான மார்கழி மகோற்சவம் இசை ஆராதனை விழா ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானம் – கோவையில் நடத்த இருக்கின்றனர்.

இச்சங்கமம் ஆர்ய வைஸ்ய திறமைகளுக்கான ஒரு மாபெரும் மேடை. தங்கள் கலை திறமையை வெளிப்படுத்த ஓர் களம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்த விரும்புபவர்கள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

தகவலுக்கு நன்றி – திருமதி. லக்ஷ்மிப்ரியா ஸ்ரீதரன், WAM – South Tamilnadu Mahila vibagh, President.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

ஆன்மீக சுற்றுலா – கழுகு மலை வெட்டுவான் கோவில் | பண்ருட்டி சொ. முத்துக்குமார்

திருநெல்வேலியிலிருந்து கழுகுமலைக்கு புறப்பட்டோம். அங்கு செல்வதற்கு முன் நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்தது. இவ்வூருக்கு கழுகாச்சலம், தென்பழனி, அரைமலை, திருநெற்சுரம், பெருநெற்சுரம் என பழங்கால பெயர்கள் இருந்தன என்பதற்கு சான்றுகள் உள்ளன.

கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயில் ஒரு சிறு மலையின் ஒரு பகுதியை அப்படியே செதுக்கி இக்கோயிலை வடித்திருக்கிறார்கள்.(இயந்திரங்கள் இல்லாமல் இது எப்படி சாத்தியம்? புரியவில்லை)

இந்தியாவில் இது போல் மராட்டிய மாநிலத்தில் உள்ள எல்லோராவில் மட்டுமே இப்படிப்பட்ட கோயில்கள் உண்டு என்று சொல்கிறார்கள். மலையின் ஒரு பகுதியில் 7.5 மீட்டருக்கு சதுரமாகவும் ஆழமாகவும் வெட்டி அதன் நடுப்பகுதியை மட்டும் கோயிலாக செதுக்கியிருக்கிறார்கள். விமானத்தில் காட்சியளிக்கும் உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால் பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர். பொதுவாக வீணை வாசிக்கும் தட்சிணாமூர்த்தியின் உருவத்தை பார்த்திருக்கலாம். ஆனால் இங்கே தட்சிணாமூர்த்தி ஒய்யாரமாக மிருதங்கம் வாசிக்கும் அழகை கண்டு ரசிக்க மட்டுமல்லாமல் அப்படியே பிரமித்து நிற்கலாம்.

சிவபெருமானின் பூதங்கணங்கள் இசைக்கருவிகள் வாசிப்பது போன்ற சிற்பங்கள் நம்மை வியக்கவைக்கின்றன. பாண்டிய மன்னன் பராந்தகநெடுஞ்செழியன் காலத்தில் (சுமார் 800 AD) இந்த குடைவரைக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. மலையை மேல் புறத்திலிருந்து குடைந்து அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு நம்மை அசர வைக்கின்றது.

ஒவ்வொரு சிற்பமும் அசாத்திய அழகுடன் இதை விட யாரும் சிறப்பாக எங்களை செதுக்கமுடியாது என்று தங்களைப்படைத்த சிற்பிகளுக்காக பரிந்து பேசுவதுபோல் உள்ளது.

வேறு கிரஹத்தை சேர்ந்த சிற்பிகள் செதுக்கியிருக்கலாமோ எனக்கூட மிகையாக எண்ணத்தோன்றுகிறது

கோயில் முழுமையடையாமல் இருக்கும் போதே நம் கற்பனை எங்கேயோ போகிறது என்றால் இந்த சிறிய கோயில் முழுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால்…..மன்னிக்க …என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. தற்போது கருவறையில் பிள்ளையாரை வைத்து வழிபட்டு வருகின்றனர். பிரிய மனமில்லாமல் மேலே பார்த்தேன். அங்கே சற்று உயரத்தில் காணப்பட்ட சமண சிற்பங்கள் எங்களையும் வந்து பார் என்று மென்மையாக அழைப்பது போல் இருந்தது. சிறிய படிக்கட்டுகளில் ஆர்வமாக ஏறி சென்றோம். ரிஷிப தேவரிலிருந்து மகாவீரர் வரை காணப்பட்ட சிற்பங்கள் அஹிம்சையை போதிப்பது போல் நின்று கொண்டிருந்தன.

சமணர்களுக்கு மிகமுக்கியமான இடமாக இது இருந்திருக்கிறது என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் மலையின் கீழே அமைந்துள்ள கழுகாசலமூர்த்தி கோயில் அனைவரும் அறிந்ததுதான். இங்கே அருள்பாலிக்கும் முருகர் மிகவும் பிரிசித்தம். இதை முருகர் கோயில் என்றே பலரும் வணங்கி செல்கிறார்கள். ஆனால் இக்கோயிலின் சற்று பின்னே அமைந்துள்ள தென் அஜாந்தா என்று போற்றப்படுகின்ற வெட்டுவான் கோயிலையும், சமணர் சிலைகளையும், படுகைகளையும் பார்க்க வருபவர்கள் மிகச்சிலரே. நண்பர்களே நீங்கள் கலையை ரசிக்கும் ரசிகர் என்றால் இந்த வெட்டுவான் கோயில் உங்கள் மனதை சுண்டி இழுக்கும், இதன் நினைவு உங்களை விட்டு அகலாது இது உறுதி.

விரைவில் இந்தக்கோயில் உலக பாரம்பரியக் சின்னத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். கீழடியைப் போல் இது பிரபலமாக அந்த கைலாசநாதர் தான் அருள்பாலிக்க வேண்டும்.

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

பண்ருட்டி சொ. முத்துக்குமார்

மூளைக்கு கொஞ்சம் சாப்பாடு | Learn To Solve Rubix Cube

பல்வேறு நிறங்களை உள்ளடக்கிய கன சதுர கட்டங்களை ஒரு சேர ஒழுங்குபடுத்தும் விளையாட்டு ரூபிக்ஸ் கியூப். Every Problem has a Solution என்ற உண்மையை ரூபிக்ஸ் கியூப் கற்றுக்கொடுக்கும் என்கிறார் வைஸ்ய குலத்தை சேர்ந்த Rubix Cube Solver சாய் கிருஷ்ணா.

துப்பாக்கி திரைப்படத்தில், நாயகன் ரூபிக்ஸ் Puzzle ஐ solve செய்து கொண்டே புலன் விசாரணையை முடிப்பதை நாம் அனைவரும் அறிந்ததே 😉

ஞாபக சக்தியினை அதிகரிக்கும், பொறுமையின் வலிமையை கற்றுக்கொடுக்கும், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் Rubix Cube Solve செய்யும் யுக்தியை ஹரி கிருஷ்ணா தொகுத்து வழங்கும் மூளைக்கு கொஞ்சம் சாப்பாடு என்ற பகுதியை கண்டு கற்றுக்கொள்ளுங்கள்.

பிரச்சனைகளுக்கான தீர்வு இனி உங்களிடம்!

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

கார்த்திகை தீபத் திருவிழா | திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

கார்த்திகை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையும், தீபத் திருநாளும் தான்.

வரும் கார்த்திகை மாதம் 5 – 12 – 2019 முதல் 10 – 12 – 2019 வரை திருவண்ணாமலையை சேர்ந்த ஆர்ய வைஸ்ய பெருமக்கள் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், மாபெரும் அன்னதானத்தையும் நடத்த இருக்கின்றனர்.

அழைப்பிதழ்:

பல ஆண்டுகளாக நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவினையும், அன்னதானத்தையும் திருவண்ணாமலை வைசியர்கள் சீரும் சிறப்புமாக நடத்துகின்றனர். உயிரை காக்கும், தானத்திலேயே சிறந்த தானமான அன்னதானத்தில் தங்களால் இயன்ற தொகையை அளித்து பலரின் பசியினை போக்குங்கள். ஜெய் வாசவி!

Bank Details:

Bank Name – Karur Vysya Bank

Account Name: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

Account Number: 1198155000060792

IFSC: KVBL0001198

&

Bank Name – Lakshmi Vilas Bank

Account Name: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா ஆர்ய வைஸ்ய சந்தர்ப்பனை குழுவினர்

Account Number: LVB 0741301000030711

IFSC: LAVB0000741

தகவல்: திரு. ஜெகதீஷ், கள்ளக்குறிச்சி – 99527 60894

ஸ்ரீ வாசவி வரன்கள் Telegram லிங்க்: https://t.me/joinchat/GZbwtEvN8ZlA9UzXfSN7Fg

VYSDOM இன் for Aryavysyas WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

Story of Vasavi Charitharam for Kids

#Children’sDayEve

ஸ்ரீ வாசவியின் புண்ய சரித்திரம் அடுத்தடுத்த தலைமுறைகளும் அறிதல் மிக மிக அவசியமல்லவா?! அதன் அவசியத்தை உணர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு பயிலும் NextGen Vasavian வர்ஷிதா கணேஷ், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரியும் வகையில் Simple ஆக, Crisp ஆக ஸ்ரீ வாசவி அன்னையின் சரித்திர கதையை கூறியுள்ளார்.

Varshitha with Family

🌐VYSDOM இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp