HomeBhaktiகோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் உருவாக்கிய அதிநவீன டர்ஃப் மைதானம்

கோவை மாநகரை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட ஆர்ய வைஸ்ய இளைஞர்கள் ஒன்று கூடி, தமிழகத்தின் மிகப்பெரிய மற்றும் உயரமான டர்ஃப் மைதானத்தை உருவாக்கியுள்ளனர். கிரிக்கெட், கால்பந்து மற்றும் வெளிநாட்டில் பிரசத்தி பெற்ற பிக்ள்பால் போன்ற விளையாட்டுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த பல்துறை திறன் கொண்ட மைதானம், இரவு நேரங்களிலும் சிறந்த விளையாட்டு நிலைமைகளை உறுதிப்படுத்தும் அதிநவீன விளக்குகளைக் கொண்டுள்ளது.

“கோல்டன் ஸ்போர்ட்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன்” என்று பெயரிடப்பட்ட இந்த டர்ஃப் மைதானம், ஆர்யவைஸ்ய சமூக இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் குழுப்பணிக்கு சான்றாகும். இந்த திட்டத்தை சாதனை நேரத்தில், வெறும் மூன்று மாதங்களில் நிறைவேற்றிய  திரு. ரூபேஷ், திரு. விமல் மற்றும் திரு. முரளி ஆகியோரின் தலைமைத்துவத்திற்கு பாராட்டுக்கள். வைஸ்ய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இளைஞர்களிடையே விளையாட்டு திறமைகளை வளர்ப்பதும், சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதும் இவர்களின் முக்கிய இலக்காகும்.

மேலும் பல வைஸ்ய இளைஞர்களை ஒன்றிணைத்து ஆர்யவைஸ்ய சமூகத்தின் நீண்ட கால முன்னேற்றத்திற்கு பயன்பெறும் பல வியத்தக திட்டங்கள் இவர்கள் வசம் உள்ளது.

இந்த சாதனையுடன் கூடுதலாக, வாசவி கிளப் மில்லினியல்ஸ் கோவை, வரும் ஜனவரி 26 ஆம் தேதி இந்த மைதானத்தில் மாவட்ட அளவிலான டர்ஃப் கிரிக்கெட் தொடரை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைஸ்ய சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமையை  வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

Kannikadhanam.com – Trusted Aryavysya Matrimony Website | WhatsApp your Horoscope here to Register: https://wa.me/+919944917638

VYSDOM for Aryavysyas இன் WhatsApp குழுவில் இணைய, இங்கே பதிவு செய்யவும்: VYSDOMWhatsApp

Click here and Join on Vysdom for Aryavysyas Facebook Group

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

பி.என்.இராமசந்திரன் on A Spiritual Tour to Coimbatore Sri Vasavi Kannika Parameswari Temple [VIDEO]
Pandurangaan chairman inspire innovative foundation trust Salem Tamil Nadu on வைஸ்ய வது வரன் ஜாதக பரிவர்தனை WhatsApp குழுக்கள்!
கல்பனா கனகராஜ் on Editor’s Voice – A New Diwali Thought
vasavi vijayan on VYSDOM.IN – Editor’s Voice
B.Vivekananthan on VYSDOM.IN – Editor’s Voice
Bala Dhandayutham on VYSDOM.IN – Editor’s Voice
Kumaresan Gokulanathan on VYSDOM.IN – Editor’s Voice
Vn.KCGF. K.Saravanan, Theni. on VYSDOM.IN – Editor’s Voice
Vn.KCGF. K.Saravanan on VYSDOM.IN – Editor’s Voice
Andal and Balu, from Atlanta. on The Woman Power – Mrs. Sharmila Dinesh
Bala Dhandayutham Rajeswari on The Woman Power – Mrs. Sharmila Dinesh
Venkatesan TKLP on VYSDOM.IN – Editor’s Voice